டிஎன்பிஎஸ் குரூப் 2, குரூப் 2 ஏ தேர்வுகள் எப்போது நடைபெறும் என்பதற்கான அறிவிப்பு நாளை வெளியாக உள்ளது. அதற்கான அறிவிப்பை சென்னை அலுவலகத்தில் டிஎன்பிஎஸ்சி தலைவர் வெளியிடுகிறார்.
இதுதான் நல்ல சான்ஸ்.. சென்னையில் சொந்த வீடு வாங்க ஆஃபரை அள்ளித்தரும் டிவிஎஸ் எமரெல்ட் தமிழக அரசு வேலையில் அமர வேண்டும் என்று நினைக்கும் லட்சக்கணக்கான இளம் தலைமுறையினர் டிஎன்பிஎஸ்சி தேர்வுகள் பற்றிய அறிவிப்பு எப்போது வெளியாகும் என்று காத்துக்கொண்டிருப்பார்கள்.
தமிழக அரசின் பல்வேறு துறைகளுக்கு தேவைப்படும் ஊழியர்கள், அலுவலர்கள் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் மூலம் தேர்வு செய்யப்பட்டு வருகின்றனர். இதன் மூலம் போட்டி தேர்வுகள் ,நேர்காணல் தேர்வுகள் ஆகியவற்றை தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்துகிறது. அரசு பணிகளின் அடிப்படையில் இந்த தேர்வுகள் குரூப் 1, குரூப் 2, குரூப் 3 மற்றும் குரூப் 4 மற்றும் குரூப் 5,6,7,8 ஆகிய தேர்வுகள் உள்ளன.
இந்நிலையில் அரசு துறைகளுக்கு ஊழியர்கள் முதல் அதிகாரிகள் வரை தேர்வு செய்ய நடத்தப்படும் டிஎன்பிஎஸ்சி எனப்படும் அரசு பணியாளர் தேர்வு வாரியத்தின் புதிய பணி நியமனங்கள் மேற்கொள்ளப்படும் என்ற விவரம் முன்கூட்டியே திட்ட அறிக்கையாக வெளியிடப்படும்.
அதன்படி 2022ஆம் ஆண்டில் மேற்கொள்ள உள்ள பணி நியமனங்கள் போட்டித் தேர்வுகள் மற்றும் தேர்வு விதிமுறைகள் குறித்த திட்ட அறிக்கை கடந்த ஆண்டு இறுதியில் வெளியிடப்பட்டது.
அந்த அட்டவணையின்படி, பிப்ரவரி மாதம் குரூப் 2 தேர்வுகளுக்கும், மார்ச் மாதம் குரூப் 4 தேர்வுகளுக்கும் அறிவிப்பு வெளியிடப்படும் என்று அறிவிக்கப்பட்டது அதன்படி நாளைய தினம் குரூப் 2 தேர்வுகள் எப்போது நடைபெறும் என்ற அறிவிப்பு வெளியாக உள்ளது.
இந்த ஆண்டு மொத்தம் 5,831 காலிப் பணியிடங்களுக்கு குரூப் 2, குரூப் 2 ஏ தேர்வும், 5,255 காலிப் பணியிடங்களுக்கு குரூப் 4 தேர்வும் நடைபெற உள்ளது. இந்த ஆண்டு டிஎன்பிஎஸ்சி சார்பில் 32 வகையான தேர்வுகளை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. அறிவிப்பு வெளியான 75 நாள்களில் தேர்வுகள் நடைபெறும் என்றும் டிஎன்பிஎஸ்சி தலைவர் தெரிவித்துள்ளார்.