தமிழகத்தின் ஆறு மாவட்டங்களில் அடுத்த மூன்று மணி நேரத்தில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
கடந்த சில நாட்களாக தமிழகத்தில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. மே மாதம் முழுவதும் தென் மற்றும் மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் பெய்யத் தொடங்கிய மழை, தற்போது வரை நீடித்துக் வருகிறது. குறிப்பாக நீலகிரி, கோயம்புத்தூர் பகுதிகளில் இரண்டு, மூன்று நாட்களாக கன மழை பெய்தது.
இந்த நிலையில் அடுத்த மூன்று மணி நேரத்தில் தமிழகத்தின் ஆறு மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் என்று தெரிவித்துள்ளது.
அதன்படி திருவள்ளூர், சென்னை, காஞ்சிபுரம், நீலகிரி, திருநெல்வேலி ஆகிய ஆறு மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு இன்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
அதே வேளை கேரள மாநிலத்தின் சில பகுதிகள் கர்நாடக மாநிலத்தின் சில பகுதிகளில் காவிரி ஆற்றிற்கான நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து கனமழை பெய்து வருவதால் கர்நாடகா மாநிலத்தில் உள்ள கபினி மற்றும் கிருஷ்ணராஜசாகர் அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது.
இந்த அணைகளின் பாதுகாப்பு கருதி உபரிநீர் காவிரி ஆற்றில் தமிழகத்துக்கு திறந்து விடப்பட்டுள்ளது. இந்த தண்ணீர் கர்நாடக-தமிழக எல்லையான பிலிகுண்டுலு வழியாக காவிரி ஆற்றில் கரைபுரண்டு தர்மபுரி மாவட்டம் ஒகேனக்கல்லுக்கு வந்து கொண்டிருக்கிறது. இதனால் ஒகேனக்கல்லில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.