அக்டோபர் மாத தொடக்கத்தில் இருந்து ஏற்ற இறக்கத்துடன் காணப்பட்டு வந்த தங்கம் விலை (gold price) தற்போது 43 ஆயிரத்திற்கும் கீழ் குறைந்து விற்பனையாகிறது.
அதன்படி நேற்று, 22 காரட் ஆபரண தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.5 குறைந்து ஒரு கிராம் ரூ.5,365 ஆகவும், சவரனுக்கு ரூ.40 குறைந்து ஒரு சவரன் ரூ.42,920 ஆகவும் விற்பனை செய்யப்பட்ட நிலையில்,
இன்று, 22 காரட் ஆபரண தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.15 உயர்ந்து ஒரு கிராம் ரூ.5,380ஆகவும், சவரனுக்கு ரூ.120 உயர்ந்து ஒரு சவரன் ரூ.43,040ஆகவும் விற்பனை செய்யப்படுகிறது.
இன்று,18 காரட் ஆபரண தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.17 உயர்ந்து ஒரு கிராம் ரூ.4,407 ஆகவும், சவரனுக்கு ரூ.136 உயர்ந்து ஒரு சவரன் ரூ.35,256ஆகவும் விற்பனை செய்யப்படுகிறது.
நேற்று, வெள்ளி விலை 50 காசுகள் உயர்ந்து ஒரு கிராம் வெள்ளி ரூ.75.50க்கும், ஒரு கிலோ வெள்ளி ரூ.75,500க்கும் விற்பனை செய்யப்பட்ட நிலையில்,
இன்று, வெள்ளி விலையில் எந்த மாற்றமும் இன்றி ஒரு கிராம் வெள்ளி ரூ.75.50க்கும், ஒரு கிலோ வெள்ளி ரூ.75,500க்கும் விற்பனை யாகிறது.