VCK Conference- திருச்சியில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி மாநாடு இன்று (ஜன.26) மாலை நடைபெற உள்ள நிலையில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட அரசியல் கட்சித் தலைவர்கள் பங்கேற்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
திருச்சி மாவட்டம் சிறுகனூரில் சென்னை தேசிய நெடுஞ்சாலையில்,விடுதலை சிறுத்தைகள் கட்சியின் `வெல்லும் ஜனநாயகம்’ மாநாடு இன்று மாலை நடைபெறுகிறது.
நாடாளுமன்ற தேர்தல் நடைபெற இன்னும் சில மாதங்களே உள்ளது.
இதற்காக அதிமுக ,திமுக ,பாஜக உள்ளிட்ட கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த சூழலில் திருச்சி மாவட்டம் சிறுகனூரில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பில் வெல்லும் ஜனநாயகம் என்ற தலைப்பில் இன்று மாலை 4 மணிக்கு மாநாடு நடைபெறுகிறது.
அக்கட்சியின் அரசியல் வெள்ளிவிழா, திருமாவளவனின் மணி விழா, இந்தியா கூட்டணி கட்சி தேர்தல் வெற்றிக்கான கால்கோள் விழா என முப்பெரும் விழாவாக இந்த மாநாடு நடைபெறுகிறது.
இதையும் படிங்க :http://Electric Trains-சென்னை சென்ட்ரல் – திருத்தணி மின்சார ரயில்கள் ரத்து!
இந்த மாநாட்டில் சிறப்பு அழைப்பாளராக திமுக தலைவரும், முதலமைச்சருமான மு. க. ஸ்டாலின் பங்கேற்கிறார்.
இதேபோன்று அகில இந்திய காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய பொதுச் செயலாளர் சீதாராம் யெச்சூரி,
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய பொதுச் செயலாளர் டி ராஜா உள்ளிட்ட 28 கட்சிகளின் தலைவர்கள் பங்கேற்க உள்ளனர்.
மேலும் காங்கிரஸ் கட்சியின் அகில இந்திய தலைவர் மல்லிகார்ஜுன கார்கே வருகை உறுதி செய் யப்படவில்லை.
முப்பெரும் விழாவாக இந்த மாநாட்டின் நுழைவு வாயில் பழைய நாடாளுமன்ற கட்டிட வடிவில் அமைக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க :https://x.com/ITamilTVNews/status/1750753121058574446?s=20
சமீப காலமாக திமுக கூட்டணியில் பாமக இடம் பெற உள்ளதாக தகவல்கள் வெளியாகி வந்தனர்.
அப்படி ஒருவேளை திமுக கூட்டணியில் பாமக இடம் பெற்றால் கூட்டணியில் இருந்து விடுதலைச் சிறுத்தைகள் கட்சி வெளியேற வேண்டிய கட்டாயம் ஏற்பட்டு விடும் என்று
அரசியல் விமர்சகர்கள் கூறி கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
ஆனால், அதற்கெல்லாம் முற்றுப்புள்ளி வைக்கும் விதமாகவும் திமுக கூட்டணியில் விடுதலை சிறுத்தைகள் கட்சி(VCKConference) ஒன்று பட்டு செய்யப்படும் என்பதை நிரூபிக்கும்
வகையில் இந்த மாநாடு அமையும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.