தமிழகத்தில் தற்போது பருவமழை வெளுத்துவாங்கி வரும் நிலையில் பொதுமக்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு தமிழக அரசு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது .
இந்நிலையில் தமிழகத்தில் உள்ள பல மாவட்டங்களில் தற்போது கன முதல் அதி கனமழை பெய்து வருவதால் தமிழகத்தில் உள்ள அணிகள் மற்றும் ஏரிகள் வேகமாக நிரம்பி வருகிறது .
இந்நிலையில் சென்னைக்குக் குடிநீர் வழங்கும் முக்கிய ஏரிகளின் நீர் நிலவரம் குறித்த தகவல்கள் தற்போது வெளியாகியுள்ளன.
சென்னைக்கு குடிநீர் வழங்கும் செம்பரம்பாக்கம், புழல், பூண்டி, சோழவரம், கண்ணன்கோட்டை ஆகிய 5 ஏரிகளில் சராசியாக 74.48% நீர் இருப்பு உள்ளது.
5 முக்கிய ஏரிகளின் மொத்த கொள்ளளவான 11.757 டிஎம்சியில், தற்போது 8.757 டிஎம்சி நீர் இருப்பு உள்ளது!
செம்பரம்பாக்கம் – 85.6%
புழல் – 82.48%
பூண்டி – 57.35%
சோழவரம் – 57.91%
கண்ணன்கோட்டை – 87.2%
அதேபோல் 71 அடி உயரம் கொண்ட வைகை அணையின் நீர்மட்டம் 69 அடியாக உயர்ந்துள்ளது. தேனி, மதுரை, திண்டுக்கல், சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய 5 மாவட்ட மக்களுக்கு 3ம் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.