தமிழகத்தில் தற்போது பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில் பொதுமக்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு தமிழக அரசு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது .
பெரு மழை பெய்தாலோ பெரு வெள்ளம் ஏற்பட்டாலோ குறிப்பிட்ட வழிமுறைகளை மேற்கொள்ள அணைத்து மாவட்டங்களுக்கு சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது .
இந்நிலையில் தமிழகத்தில் உள்ள பல மாவட்டங்களில் தற்போது கனமழை பெய்து வருவதால் தமிழகத்தில் உள்ள அணைகள் மற்றும் ஏரிகள் வேகமாக நிரம்பி வருகிறது .
அந்தவகையில் தமிழகத்தில் சில முக்கிய ஏரிகளின் நீர் நிலவரம் குறித்த தகவல்கள் தற்போது வெளியாகியுள்ளன.
முக்கிய ஏரிகளின் நீர் நிலவரம் :
- 3300 மில்லியன் கன அடி கொள்ளளவு கொண்ட புழல் ஏரியின் நீரிருப்பு 2751 மில்லியன் கன அடியாக உள்ளது
- 1081 மில்லியன் கன அடி கொள்ளளவு கொண்ட சோழவரம் ஏரியின் நீரிருப்பு 642 மில்லியன் கன அடியாக உள்ளது
- 500 மில்லியன் கன அடி கொள்ளளவு கொண்ட கண்ணன்கோட்டை – தேர்வாய்கண்டிகை ஏரியின் நீரிருப்பு 434 மில்லியன் கன அடியாக உள்ளது