தமிழகத்தில் பருவமழை தொடங்கியுள்ள நிலையில் தமிழ்நாடு அரசு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது . இதற்காக தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் சிறப்பு குழுவும் அமைக்கப்பட்டு உள்ளது .
இந்நிலையில் தமிழகத்தில் அங்கங்கே பருவமழை தொடங்கி பெய்து வரும் நிலையில் தமிழகத்தில் உள்ள சில முக்கிய ஏரிகளின் நீர் நிலவரம் குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளன.
செம்பரம்பாக்கம் ஏரிக்கு நீர்வரத்து 1284 கனஅடியாக அதிகரிப்பு :
3645 மில்லியன் கனஅடி கொள்ளளவு கொண்ட ஏரியில், நீர்இருப்பு 2799 மில்லியன் கனஅடியாக உள்ளது; குடிநீருக்காக 104 கனஅடி நீர் வெளியேற்றம்
புழல் ஏரி நீர் நிலவரம்
- புழல் ஏரியில் நீர்இருப்பு 2217 மில்லியன் கனஅடியாக உள்ளது; நீர்வரத்து 525 கனஅடியாக அதிகரிப்பு; சென்னை குடிநீருக்காக 159 கனஅடி நீர் வெளியேற்றம்
- சோழவரம் ஏரியில் நீர்இருப்பு 165 மில்லியன் கனஅடியாக உள்ளது; நீர்வரத்து 93 கனஅடியாக சரிவு
- கண்ணன்கோட்டை – தேர்வாய்கண்டிகை ஏரியில் நீர்இருப்பு 323 மில்லியன் கனஅடியாக உள்ளது; சென்னை குடிநீருக்காக 7 கனஅடி நீர் திறப்பு
பூண்டி ஏரிக்கு நீர்வரத்து அதிகரிப்பு
- பூண்டி ஏரிக்கு நீர்வரத்து 2040 கனஅடியாக அதிகரிப்பு; நீர்இருப்பு 2823 மில்லியன் கனஅடியாக உள்ளது; செம்பரம்பாக்கம் ஏரிகளுக்கு 630 கனஅடி நீர் வெளியேற்றம்
- 2வது நாளாக பூண்டி ஏரியில் இருந்து கொசஸ்தலை ஆற்றுக்கு 1000 கனஅடி உபரிநீர் வெளியேற்றப்படுகிறது
- ஊத்துக்கோட்டை ஜீரோ பாயிண்டிற்கு வரும் கிருஷ்ணா நீர்வரத்து 411 கனஅடியில் இருந்து 420 கனஅடியாக அதிகரிப்பு; கண்டலேறு அணையில் இருந்து சென்னை குடிநீருக்காக வினாடிக்கு 900 கனஅடி நீர் திறப்பு