தமிழகத்தில் கடந்த சில நாட்களாக பல்வேறு மாவட்டங்களில் கனமழை கொட்டு தீர்த்து வருகிறது .அதிலும் குறிப்பாக சில நாட்களுக்கும் முன் உருவான புயலால் சென்னை செங்கல்பட்டு காஞ்சிபுரம் திருவள்ளூர் உள்ளிட்ட மாவட்டங்களில் பெய்த கனமழையால் அப்பகுதிகள் முழுவதும் வெள்ளத்தில் மூழ்கியது.
இதையடுத்து தென் தமிழகத்தில் பெய்த வரலாறு காணாத மழையால் தென்மாவட்டங்களில் உள்ள குடியிருப்பு பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்து பொதுமக்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகி இருந்தனர் .
இந்நிலையில் இந்த பேய் மழையால் மக்களுக்கு குடிநீரை வழங்கும் முக்கிய ஏரிகள் உடைந்து ஊருக்குள் வெள்ளம் புகுந்தது . இதையடுத்து தற்போது நிலைமை சீராகி வரும் நிலையில் சில முக்கிய ஏரிகளின் இன்றைய நிலவரம் குறித்த தகவல் வெளியாகி உள்ளது.
முக்கிய ஏரிகளின் நீர் நிலவரம் :
புழல் ஏரியில் நீர்இருப்பு 2964 மில்லியன் கனஅடியாக உள்ளது. நீர்வரத்து 46 கனஅடியாக உள்ளது. சென்னை குடிநீருக்காக 159 கனஅடி நீர் வெளியேற்றம்.
சோழவரம் ஏரியில் நீர்இருப்பு 777 மில்லியன் கனஅடியாக உள்ளது. நீர்வரத்து 16 கனஅடியாக உள்ளது.
கண்ணன்கோட்டை – தேர்வாய்கண்டிகை ஏரியில் 28வது நாளாக நீர்இருப்பு முழு கொள்ளவில் நீடிக்கிறது. நீர்வரத்து 10 கனஅடியாக உள்ளது.
சென்னைக்கு குடிநீர் வழங்கும் செம்பரம்பாக்கம், புழல், பூண்டி, சோழவரம், கண்ணன்கோட்டை ஆகிய 5 ஏரிகளில் 88.93% நீர் இருப்பு உள்ளது.
செம்பரம்பாக்கம் – 86.45%
புழல் – 89.82%
பூண்டி – 94.83%
சோழவரம் – 71.88%
கண்ணன்கோட்டை – 100%