தொப்பூர் சாலையில் அடுத்தடுத்து 3 லாரிகள், 2 கார்கள் மோதி பயங்கர விபத்து ஏற்பட்டதில் 4 பேர் பரிதாபகமாக (Udhay Tweet) உயிரிழந்துள்ளனர் .
இந்த கோர விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு அரசு நிச்சயம் துணை நிற்கும் என தமிழ்நாடு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சர் உதயநிதி தெரிவித்துள்ளார்.
கர்நாடகா மாநிலத்தில் இருந்து நெல் பாரம் ஏற்றிய லாரி நேற்று மாலை தருமபுரியைக் கடந்து தொப்பூர் கணவாய் தேசிய நெடுஞ்சாலை வழியாக சேலம் நோக்கிச் சென்று கொண்டிருந்தது.
தொப்பூர் கணவாய் இரட்டைப் பாலத்தில் சென்றபோது திடீரென ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து, முன்னால் சென்ற பார்சல் சர்வீஸ் லாரி மீது மோதியது.
பார்சல் சர்வீஸ் லாரி, அதற்கு முன்னால் சென்ற லாரி மீது மோதியது. இதில் ஒரு லாரி பாலத்தின் கீழே கவிழ்ந்தது.
இதற்கிடையில், வந்த இன்னோரு லாரி 2 கார்கள் மீது மோதியது. இதில் ஒரு கார், அந்த லாரியின் கீழே சிக்கிக்கொண்டது. அப்போது லாரியில் தீப்பற்றியதால், லாரி மற்றும் கார் ஆகியவை எரியத் தொடங்கின.
இந்த விபத்தில் 4 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர் மேலும் 8 பேர் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்நிலையில் இந்த கோர விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு அரசு நிச்சயம் துணை நிற்கும் என தமிழ்நாடு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சர் உதயநிதி தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அமைச்சர் உதயநிதி (Udhay Tweet) வெளியிட்டுள்ள செய்தியில் கூறிருப்பதாவது :
தர்மபுரி – தொப்பூர் கணவாய் பகுதியில் எதிர்பாராத விதமாக நடந்த விபத்தில் நான்கு பேர் உயிரிழந்திருப்பது அறிந்து மிகுந்த அதிர்ச்சியும், வேதனையும் அடைந்தோம்.
இந்த விபத்தில் காயமடைந்தவர்களுக்கு உரிய மருத்துவ சிகிச்சைகள் அளிக்கப்பட்டு வருகின்றன.
Also Read : https://itamiltv.com/tamil-development-department-tngovt-award/
இத்துயர சம்பவத்தால் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு ஆறுதலை தெரிவித்துக் கொள்கிறோம்.
இக்கோர விபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கும், உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கும் அரசு நிச்சயம் துணை நிற்கும் என அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மனமுருக தெரிவித்துள்ளார்.