தமிழ்நாடு அரசு அனுப்பிய நீட் தேர்வு விலக்கு மசோதாவிற்கு உடனடியாக ஒப்புதல் தரவேண்டும் என திமுக ம்க்களவை குழு தலைவர் டி.ஆர்.பாலு எம்.பி மக்களவையில் வலியுறுத்தியுள்ளார்.
அரசியல் சாசன சட்டத்தின் 200-வது விதிப்படி ஆளுநர் சட்டத்தை ஜனாபதிக்கு அனுப்பியிருக்கவேண்டும். ஜனாதிபதிக்கு அனுப்பாமல் ஆளுநர் காலம் தாழ்த்தி வருவதாக மக்களவையில் டி.ஆர். பாலு குற்றம்சாட்டி கடுமையாக சாடினார். டி.ஆர்.பாலு பேசியபோது, பாஜகவை சேர்ந்த எம்.பிக்கள் கூச்சல், குழப்பத்தில் ஈடுபட்டனர்.