கனமழை காரணமாக சுரங்கப்பாதைகளில் தஞ்சம் புகுந்த வெள்ளம்! – போக்குவரத்திற்கு தடை விதித்தது காவல்துறை!

traffic-blocked-in-4-tunnels-in-chennai-due-to-heavy-rains
traffic blocked in 4 tunnels in chennai due to heavy rains

சென்னையில் கனமழை காரணமாக மழைநீர் தேங்கியதால் தியாகராயர் நகர் மேட்லி சுரங்கப்பாதை, ரங்கராஜபுரம் சுரங்கப்பாதை உள்ளிட்ட4 சுரங்கப்பாதைகளில் போக்குவரத்திற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் நேற்று இரவு முதல் இன்று காலை வரை கொட்டித் தீர்த்த கனமழையால் சாலைகள் வெள்ளக்காடானது.

கோயம்பேடு, நுங்கம்பாக்கம், தாம்பரம் , பூந்தமல்லி, கோடம்பாக்கம், வேளச்சேரி, போரூர், உள்ளிட்ட இடங்களில் காற்றுடன் கூடிய கனமழை பெய்து வருகிறது. இதனால், சாலைகளில் தாழ்வான இடங்களில் தண்ணீர் தேங்கி சாலைகள் வெள்ளக்காடானது.

traffic-blocked-in-4-tunnels-in-chennai-due-to-heavy-rains
traffic blocked in 4 tunnels in chennai due to heavy rains

இந்த நிலையில், சென்னையில் கனமழை காரணமாக தியாகராயர் நகர் மேட்லி சுரங்கப்பாதை, ரங்கராஜபுரம் சுரங்கப்பாதை, தாம்பரம் ரயில்வே சுரங்கப்பாதை, கணேசபுரம் சுரங்கப்பாதைகளில் போக்குவரத்திற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
சுரங்கப்பாதைகளில் 5 அடி வரை தண்ணீர் தேங்கி இருப்பதால் பாதுகாப்பை கருத்தில் கொண்டு காவல் துறையினர் இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளனர்.

Total
0
Shares
Related Posts