திண்டிவனத்தில் உறவினர் வீட்டு நிகழ்ச்சிக்காகச் சென்ற சிறுவன் மின்சாரம் பாய்ந்து உயிரிழந்த சோகம் சம்பவம் நிகழ்ந்துள்ளது.
திண்டிவனத்தில் உள்ள தங்களது உறவினர் வீட்டு திருமண நிகழ்ச்சிக்காக 5 வயது மோத்திஸ் என்ற சிறுவனை அழைத்துக்கொண்டு அவரது குடும்பம் சென்றுள்ளது.
திருமண நிகழ்ச்சியில் உறவினர்களை கண்டதும் ஒருவரை ஒருவர் அன்பை பரிமாறிக்கொண்ட நிலையில் சிறுவன் மோத்திஸ் நிகழ்ச்சியில் வைக்கப்பட்டிருந்த பாப்கார்ன் இயந்திரத்தை பார்த்து அங்கு சென்றுள்ளான் .
அப்போது பாப்கார்ன் இயந்திரம் இணைக்கப்பட்டிருந்த சுவிட்ச் பாக்ஸில் கை வைத்த மோத்திஸ் மீது மின்சாரம் பாய்ந்துள்ளது. இதில் தூக்கிவீசப்பட்ட சிறுவனை மீட்ட அருகிலிருந்தவர்கள் மருத்துவமனைக்குச் அழைத்துச் சென்றபோது சிறுவன் வழியிலேயே உயிரிழந்துள்ளார் .
இதையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் இந்த விபத்து குறித்து வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஆனந்தமாய் குடும்பத்துடன் திருமண நிகழ்ச்சிக்கு சென்ற 5 வயது சிறுவன் மின்சாரம் பாய்ந்து உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.