free fire கேம் மூலமாகப் பழகி மதுரையை சேர்ந்த 16 வயது பள்ளி சிறுமியைக் காதலிப்பதாகக் கூறி கடத்தி சென்ற பூனாவை சேர்ந்த மஹாராஷ்டிரா இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளார். கடலூர் மாவட்டம் டீக்கடையூர் பகுதியைச் சேர்ந்தவர் கிருஷ்ணமூர்த்தி .
இவர் பல ஆண்டுகளுக்கு முன்புவேலைக்காக மஹாராஷ்டிரா மாநிலம் ராஜ்கோர்ட் பகுதிக்கு வேலைக்குச் சென்றுள்ளார்.இந்த நிலையில் அங்கேயே பணிபுரிந்து மஹாராஷ்டிரா மாநிலத்தைச் சேர்ந்த பெண்ணை திருமணம் செய்து வாழ்க்கை நடத்தி வந்துள்ளார் . இந்த தம்பதிகளுக்கு 22 வயதில் செல்வா என்ற மகன் இருந்துள்ளார்.இவர் எந்நேரமும் வீடியோ கேமில் தனது முழு நேரத்தையும் செலவழித்து வந்துள்ளார்.
இந்த நிலையில் 2021 ஆம் ஆண்டு free fire கேம் மூலமாக மதுரை பசுத்தலைப் பகுதியைச் சேர்ந்த 11 வகுப்பு மாணவி கேம் மூலம் அறிமுகம் ஆகியுள்ளார்.இந்நிலையில் கேம் மூலம் இருவருக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இதை பயன்படுத்திக்கொண்ட செல்வா 11 வகுப்பு மாணவியை ஆசைவார்த்தை கூறி காதலிப்பதாகத் தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் சிறுமியைத் திருமணம் செய்து கொள்ளாவதாகக் கூறி ஆசைவார்த்தை குறி மதுரை பெரியார் பேருந்து நிலையத்திற்கு வரச் சொல்லி உள்ளார்.இதனைத் தொடர்ந்து மஹாராஷ்டிரா மாநிலம் ராஜ்கோர்ட் பகுதிக்கு அழைத்துச் சென்று உள்ளார்.வீட்டிலிருந்த மகள் காணாமல் போனதாகக் கூறி மதுரை திருப்பரங்குன்றம் காவல் நிலையத்தில் பெற்றோர்கள் கடந்த ஆண்டு புகார் தெரிவித்துள்ளனர்.
சிறுமியின் பெற்றோர்கள் அளித்த புகாரின் அடிப்படையில் காவல்துறை வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்ட காவல்துறை பல்வேறு இடங்களில் தேடி வந்தனர். இந்தநிலையில் சிறுமி பயன்படுத்திய செல்போன் நம்பரைப் பயன்படுத்தி அவர்கள் இருக்கும் இடத்தை கண்டறிந்தனர் .இதனைச் சுதாரித்துக்கொண்ட செல்வா காவல்துறை வருவதைக் கண்டு தப்பிச் சென்றுள்ளார்.
இவர்களிடம் இருந்த சிறுமியை மீட்டனர்.இந்த நிலையில் சிறுமியிடம் நடப்பட்ட விசாரணை தொடர்ந்து காணாமல் போன வழக்கை போக்ஸோ வழக்காக மாற்றினர். இந்த நிலையில் 2 மாதத்திற்குக் கழித்து மஹாராஷ்டிரா மாநிலம் ராஜ்கோர்ட் பகுதியில் வசித்து வந்தது தெரியவந்துள்ளார்.
உடனடியாக திருபாரங்குன்றம் காவல்துறை மஹாராஷ்டிரா மாநிலம் விரைந்து சென்று செல்வா போக்ஸோ சட்டத்தின் கீழ் கைது செய்து நீதிமன்றத்தில் முன்னிறுத்தி சிறையில் அடைத்தனர்.11 வகுப்பு படிக்கும் சிறுமியை காணொளி கேம் மூலம் பழகி மாணவியைக் கடத்தி சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.