பேருந்து படிக்கட்டில் நின்று பள்ளி, கல்லூரி மாணவர்கள் பயணித்தால் ஓட்டுநர், நடத்துனர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என போக்குவரத்துத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.
பேருந்துகளின் படிக்கட்டுகளில் தொங்கியபடி கல்லூரி, பள்ளி மாணவர்கள் செல்லும் காட்சிகள் அன்றாடும் சமூக ஊடகங்களில் பரவி வருகின்றன. தொடர்ந்து ஆட்சியர்களும், அதிகாரிகளும் மாணவர்களை சந்தித்து அறிவுரையும் வழங்கி வருகின்றனர்.
இந்நிலையில், போக்குவரத்துத் துறை இன்று வெளியிட்ட செய்தியில்,
“அரசுப் பேருந்துகளில் பள்ளி, கல்லூரி மாணவர்கள், பொதுமக்கள் உள்ளிட்டோர் படிக்கட்டுகளில் தொங்கியபடி சென்றால் ஓட்டுநர், நடத்துநர் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.

பள்ளி, கல்லூரிகள் உள்ளிட்ட அனைத்து நிறுத்தங்களிலும் பேருந்துகளை கட்டாயம் நிறுத்தி அனைவரையும் ஏற்றிச் செல்ல வேண்டும் என்றும் பயணிகள் ஏறுவதற்கு ஏதுவாக வழி ஏற்படுத்தி கொடுத்த பின், அனைவரும் ஏறிய பின்னே பேருந்தை இயக்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளது.