திருச்சி (trichy) மாநகராட்சி கூட்டத்தில் மேயருடன் விசிக கவுன்சிலர் வாக்குவாதத்தில் ஈடுபட்ட சம்பவம் பெரும் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.
திருச்சி(trichy) மாவட்டத்தில் கடந்த புதன்கிழமை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாமன்ற கூட்டம் நடைபெற்றது.இந்த கூட்டத்தில் மேயர் மு.அன்பழகன், துணை மேயர் திவ்யா, மாவட்ட ஆட்சியர் திவ்யதர்ஷினி மற்றும் அரசு அதிகாரிகள் பங்கேற்றனர்.
இந்த மாமன்ற கூட்டத்தில்,அனைத்து கட்சி கவுன்சிலர்கள் கலந்து கொண்டு தங்கள் வார்டுகளுக்கு ஏற்படும் பிரச்சனைகள் குறித்து எடுத்துறைதனர். அப்போது திடீரென விசிக கட்சி கவுன்சிலர் ஒருவர் எனக்கு சாதி பாகுபாட்டுடன் பின்புற இருக்க ஒதுக்கப்பட்டுள்ளதாக மேயருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.
அப்போது பேசிய மேயர் அரசியல் கட்சிகளுக்கு கட்சி ரீதியாக தான் இருக்கை ஒதுக்கப்பட்டுள்ளதாக கூறினார். தொடர்ந்து மாமன்ற கூட்டத்தில் வீசிக கட்சி கவுன்சிலர் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால்கூட்டத்தில் படம் பிடித்துக் கொண்டு இருந்த செய்தியாளர்களின் மேயர் வெளியேறும் படி உத்தரவிட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இதனை தொடர்ந்து அதிமுக கவுன்சிலர்கள் பொது மக்களுக்கு பாதிப்பு ஏற்படுத்தும் வகையில் மின் கட்டணத்தை உயர்த்தி உள்ளது. இந்த மின் கட்டணத்தை உயர்த்தியது குறித்து மாமன்ற கூட்டத்தில் பேச முயன்ற போது திமுக கவுன்சிலர்கள் தொடர்ந்து பேச விடாமல் தடுத்ததால் அதிமுக கவுன்சிலர்கள் வெளிநடப்பு செய்தனர்.