திருச்சி சமயபுரத்தில் தனியார் பள்ளி விடுதியில் மாணவ, மாணவிகள் 7 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
கொரோனா வைரஸ் நாடு முழுவதும் பரவியதை அடுத்து அதனை கட்டுப்படுத்தும் வகையில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதோடு, தடுப்பூசிகளும் முழுவீச்சில் செலுத்தப்பட்டு வருகின்றன. இதனை அடுத்து கொரோனா தொற்று படிப்படியாக குறைவடைந்து ஊரடங்கில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றது.
இந்தியாவில் கொரோனா பாதிப்பு குறைவடைந்து வந்த நிலையில், கடந்த சில நாட்களாக சற்று அதிகரித்து வருகிறது.
திருச்சி சமயபுரத்தில் தனியார் பள்ளி விடுதியில் மாணவ, மாணவிகள் 7 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
தொற்று உறுதியான மாணவிகள் சிகிச்சைக்காக திருச்சியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மற்ற மாணவர்களுக்கும் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.