தமிழ் சினிமாவில் இருக்கும் டாப் 5 ஹீரோக்களில் ஒருவராக வலம் வருபவர் நம்ப வீட்டு பிள்ளை சிவகார்த்திகேயன் . பிரபல தொலைக்காட்சியில் தொகுப்பாளராக இருந்து இன்று தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வளர்ந்துள்ள SKவுக்கு ஏராளமான ரசிகர்கள் கூட்டம் உள்ளது .
படத்துக்கு படம் இவர் எடுக்கும் புதிய முயற்சிகள் அனைத்தும் ரசிகர்களுக்கு பிடித்துப்போக அந்த படங்களும் திரையரங்குகளில் சக்கை போடு போடுகிறது . அந்தவகையில் கொரோனா காலகட்டத்தில் இவரது நடிப்பில் வெளியான டாக்டர் மற்றும் டான் படங்கள் சிவகார்த்திகேயனுக்கு மிக பெரிய வெற்றியை தேடித்தந்தது .

தனது அசத்தலான நடிப்பாலும் கூடவே பிறந்த நகைச்சுவை திறனாலும் சூப்பர் ஹிட் படங்களை அடுத்தடுத்து கொடுத்த சிவகார்த்திகேயனின் லைனப்பில் மாவீரன் , அயலான் உள்ளிட்ட படங்கள் திரையரங்குகளில் வெளியாக தயாராக உள்ளது .
மடோன் அஸ்வின் இயக்கத்தில், சிவகார்த்திகேயனின் மாறுபட்ட நடிப்பில் உருவாக்கியுள்ள மாவீரன் படத்தை சாந்தி டாக்கிஸ் நிறுவனம் பல கோடி ருபாய் செலவில் பிரமாண்டமாக தயாரித்துள்ளது.

இந்த படத்தில், சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நடிகை அதிதி ஷங்கர் நடிக்க சுனில், யோகி பாபு, சரிதா, உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இந்த படத்தின் படப்பிடிப்பு பணிகள் ஏற்கனவே, முடிந்துவிட்ட நிலையில் போஸ்ட் புரோடக்ஷன் பணிகள் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன.
அந்தவகையில் தற்போது இந்த படத்தின், முக்கிய பணி ஒன்று முடிந்துவிட்டதாக படக்குழுவுடன் சேர்ந்து சிவகார்த்திகேயன் சூப்பர் அப்டேட் ஒன்றை கொடுத்துள்ளார் . அந்த அப்டேட் என்னவென்றால் மாவீரன் படத்தில் தன்னுடைய முழு டப்பிங் பணியை வெற்றிகரமாக முடித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது .
இது குறித்த புகைப்படம் ஒன்றையும் வெளியிட்டு படக்குழு இந்த செய்தியை அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. மிகப்பெரிய எதிர்பார்ப்புக்கு மத்தியில், உருவாக்கி உள்ள மாவீரன் திரைப்படம் ஜூலை 14ஆம் தேதி திரையரங்குகளில் கோலாகலமாக வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது.