தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத இயக்குநர்களில் ஒருவராக வலம் வரும் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் உலகநாயகனை வைத்து விக்ரம் என்ற சூப்பர் டூப்பர் ஹிட் படத்தை கொடுத்த பின் தற்போது தளபதியுடன் இரண்டாவது முறையாக கைகோர்த்து உள்ளார் .
ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இந்த படத்திற்கு லியோ என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது . இப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு கடும் காஷ்மீரில் சில மாதங்கள் நடைபெற்றது . இதையடுத்து இப்படத்தின் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு சென்னையின் முக்கிய இடங்களில் தற்போது முழுவீச்சில் நடைபெற்று வருகிறது .
இந்நிலையில் கடந்த மூன்று நாட்களாக லியோ படத்தில் நம்ப தளபதியின் Intro Song படப்பிடிப்பு நடைபெற்று வருவதாகவும் அதில் 500 நடன கலைஞர்களுடன் பிரம்மாண்டமாக இந்த பாடலின் படப்பிடிப்பு நடைபெற்று வருவதாகவும் கூறப்படுகிறது.
இதற்கு முன் மாஸ்டர் படத்தில் இடம்பெற்ற ’Vaathi Coming’ பாடலுக்கு நடன இயக்குனராக பணியாற்றிய தினேஷ் மாஸ்டர் தான் இந்த பாடலுக்கும் நடன இயக்குனராக பணியாற்றி வருவதாகவும் இதனால் இந்த பாடல் நிச்சயம் மிக பிரம்மாண்டமாக இருக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
பொதுவாக விஜய்யின் படங்களில் அறிமுக பாடல் எப்போதும் பிரமாண்டமாக இருப்பது மட்டுமின்றி அந்த பாடல்களுக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பும் கிடைக்கும். அந்த வகையில் ’லியோ’ படத்தின் அறிமுக பாடல் கண்டிப்பாக உலகம் முழுவதும் ஹிட் அடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
செவன் ஸ்கிரீன் ஸ்டூடியோஸ் தயாரிக்கும் இந்த படத்திற்கு ,ராக்ஸ்டார் அனிருத் இசையமைக்கவுள்ளார். மேலும் இப்படத்தில் தளபதி விஜய்யுடன் சேர்ந்து இளசுகளின் கனவுக்கன்னி திரிஷா, அர்ஜுன், சஞ்சய் தத், பிரியா ஆனந்த், மன்சூர் அலிகான், மிஷ்கின், கௌதம் வாசுதேவ் மேனன், டான்ஸ் மாஸ்டர் சாண்டி, மேத்யூ தாமஸ் உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திரங்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர்.
பெரும் பொருட்செலவில் பிலோமின் ராஜ் படத்தொகுப்பில், சதீஷ்குமார் கலை இயக்கத்தில், அன்பறிவ் ஸ்டண்ட் இயக்கத்தில், தினேஷ் நடன இயக்கத்தில் இந்த படம் உருவாகி வருவது குறிப்பிடத்தக்கது .