திருவாலங்காடு அருகே ஒரே வாலிபரை இரட்டை சகோதரிகள் (twin sisters) காதலித்த நிலையில், இவர்களின் காதலுக்கு பெற்றோர்கள் எதிர்ப்பு தெரிவித்ததால் 3 பேரும் விஷம் குடித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
திருவள்ளூர் மாவட்டம், திருவாலங்காடு ஒரத்தூர் கிராமத்தைச் சேர்ந்த இரட்டை சகோதரிகள் (twin sisters) அதே பகுதியில் 10-ம் வகுப்பு படித்து முடித்துள்ளனர்.
இதையடுத்து, சகோதரிகள் இருவரும் அவர்களின் உறவினரான 22 வயதாகும் மகேஷ் என்ற வாலிபாரி காதலித்து வந்துள்ளனர். மகேஷ் ஐ.டி.ஐ படித்து விட்டு தனியார் கம்பெனியில் வேலை செய்து வந்துள்ளார்.
இந்த நிலையில், இரட்டை சகோதரிகள் ஒரே வாலிபரை காதல் செய்து வந்த விவகாரம் இரு வீட்டாருக்கும் தெரியவந்த நிலையில், பெற்றோர்கள் இதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
இதனால், மனமுடைந்த மூவரும்தங்களது காதல் நிறைவேறாத விரக்தியில் நேற்று கொசஸ்தலையாறு அருகே விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றுள்ளனர்.
இதனை அந்த வழியாக சென்றவர்கள் பார்த்த நிலையில், உயிருக்கு போராடிய 3 பேரையும் மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் திருவள்ளூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். மருத்துவமனையில் அவர்கள் மூவரும் சிகிச்சை பெற்று வந்த நிலையில், இரட்டை சகோதரிகளில் ஒருவர் சிசிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.
மேலும், அவர்களில் 2 பேர் உயிருக்கு ஆபத்தான நிலையில் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருகின்றனர். தற்போது இச்சம்பவம் குறித்து திருவாலங்காடு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
காதல் விவகாரத்தில் காதலன் மற்றும் இரட்டை சகோதரிகள் விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்ற சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.