நாய் சேகர் பட தோல்வி குறித்த கேள்விக்கு விதி தன் வேலையை சரியாக செய்தது.யாராக இருந்தாலும் தூக்கி எறியும் மன நிலையில் மக்கள் இருக்கிறார்கள்.
திருவாரூரில் நகைச்சுவை நடிகர் முத்துக்காளை பரபரப்பு பேட்டி.
திருவாரூர் மாவட்டம் கொரடாச்சேரி வடக்கு ஒன்றிய பாஜக சார்பில் கீரந்தகுடியில் நம்ம ஊரு மோடி பொங்கல் என்கிற தவிழா நடைபெற்றது.இதில் சிறப்பு விருந்தினராக 200க்கும் மேற்பட்ட படங்களில் நடித்த நகைச்சுவை நடிகர் முத்துக்காளை கலந்து கொண்டார்.முன்னதாக அவருக்கு கோவிலில் சிறப்பு மரியாதை செய்யப்பட்டு அதனைத் தொடர்ந்து ஊருக்குள் நடந்து வந்து அவர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.
அப்போது தானாக சென்று அனைவருக்கும் கைகுலுக்கி தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டு மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்.தொடர்ந்து இந்த நிகழ்ச்சியில் பேசிய முத்துகாளை நான் நெறஞ்ச மனசு படத்தில் நடிக்கும் போது குடிகாரனாக இருந்தேன்.இப்போது நான் குடியை விட்டு ஆறு வருடங்கள் ஆகிறது.எனவே இளைஞர்கள் இந்த போதை என்கிற அரக்கனிலிருந்து மீண்டு வர வேண்டும் தங்களது தாய் தந்தையரை நினைத்தால் இந்த போதையில் இருந்து மீண்டு விடலாம் என்று பேசினார்.
முன்னதாக கிராமத்து மக்கள் அவருக்கு ஆரத்தி எடுத்து வரவேற்றனர். அவருடன் கிராம மக்கள் செல்பி எடுத்தும் மகிழ்ந்தனர். மேலும் அவரது முன்னிலையில் பெண்கள் கும்மி பாட்டு பாடி அவரை வரவேற்றனர். நிகழ்ச்சியின் இறுதியில் செய்தியாளர்களை சந்தித்த முத்துகாளை அந்த காலத்தில் இருந்து நகைச்சுவை நடிகர்கள் தங்களுடன் நடிக்கும் நடிகர்கள் தங்கள் இடத்திற்கு வந்து விடக்கூடாது என்பதில் தெளிவாக இருந்தார்கள் அதற்கு வடிவேலுவும் விதிவிலக்கல்ல.திறமை இருந்தால் நாம் முன்னேறலாம்.
ரெட் ஜெயன்ட் நிறுவனத்தின் ஆதிக்கம் குறித்த கேள்விக்கு நான் இந்த கேள்விக்குள் செல்ல வேண்டியதில்லை. நான் தயாரிப்பாளர் அல்ல விநியோகஸ்தர் அல்ல எனக்கு எந்த தியேட்டரும் கிடையாது.அதனால் இதற்கு நான் பதில் சொல்வது பொருத்தமாக இருக்காது.
நாய் சேகர் பட தோல்விக்கு இரண்டு காரணங்களை சொல்ல வேண்டும். ஊடகங்கள் நிறைய காரணங்களை சொல்லி விட்டன.நான் ஒன்றே ஒன்று தான் சொல்ல வேண்டும் விதி தன் வேலையை சரியாக செய்துள்ளது.நாம் எப்படி நடித்தாலும் மக்கள் அதை ஏற்றுக் கொள்வார்கள் என்று நினைக்க கூடாது.யாரையும் தூக்கி எறியும் மனநிலையில் மக்கள் இப்போது உள்ளார்கள்.நல்லதை ரசிக்கிறார்கள்.
ஸ்டண்ட் மாஸ்டராக ஆக வேண்டும் என்று நினைத்துதான் சினிமாவிற்கு வந்தேன் ஆனால் காலத்தின் கட்டாயம் நகைச்சுவை நடிகர் ஆகி விட்டேன்.ஆனால் எதிர்காலத்தில் நான் ஒரு படம் இயக்கும்போது அதில் நானே ஸ்டண்ட் மாஸ்டராக பணிபுரியும் ஆசை எனக்கு இருக்கிறது.
தமிழ்நாட்டை தமிழகம் என்னு அழைக்கலாம் என்கிற கருத்து குறித்த கேள்விக்கு இது அரசியல் வல்லுனர்களிடம் கேட்க வேண்டிய கேள்வி.நான் சாதாரண மனிதன் ஏழை சொல் அம்பலத்தில் ஏறாது என்று கூறினார்.
யோகி பாபு வளர்ச்சி குறித்த கேள்விக்கு நம்பிக்கையும் திறமையும் இருந்தால் யார் வேண்டுமானாலும் முன்னுக்கு வரலாம் என்பதற்கு யோகி பாபு உதாரணம் என்று கூறினார். அந்த காலத்தில் சமூக கருத்துக்கள் நிறைந்த காமெடி தேவைப்பட்டது. தற்போது காலத்தின் கட்டாயம் மக்கள் தெளிவாக இருக்கிறார்கள் அவர்களுக்கு அது போன்ற அறிவுரைகள் தேவை இல்லை என்பது தான் தற்போதைய நிலை என்று கூறினார்.