சீர்காழி அருகே டூவீலர் விபத்து வழக்கு( Two-wheeler-accident) விசாரணையில் தம்பிக்கு பதில் ஆஜராகி ஆள் மாறாட்டம் செய்த அண்ணனை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி தாலுக்கா திருமுல்லைவாசல் பகுதியில் கடந்த 2013ம் ஆண்டு டூவீலர்கள் நேருக்கு நேர் மோதிக்கொண்ட விபத்து தொடர்பாக சீர்காழி போலீசார் வழுதலைகுடி கிராமத்தைச் சேர்ந்த அசோக் என்பவர் மீது வழக்கு பதிவு செய்தனர்.
இது வழக்கின் விசாரணை தற்போது சீர்காழி நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. விசாரணைக்கு அசோக் ஆஜராக வேண்டும். ஆனால் அவருக்கு பதில் அவரது அண்ணன் குணசேகரன்.43. என்பவர் ஆஜராகி ஆலுமாராட்டம் செய்துள்ளார்.
நேற்று முன்தினம் மீண்டும் குணசேகரன் வழக்கு விசாரணைக்கு ஆஜராகி உள்ளார். இது குறித்த புகாரின் பேரில் சீர்காழி போலீசார் குணசேகரனை கைது செய்து சீர்காழி போலீஸ் ஸ்டேஷனுக்கு கொண்டு வந்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
முதற்கட்ட விசாரணையில் அசோக் வேலைக்காக வெளிநாடு சென்றதால் அவருக்கு பதில் அவரது அண்ணன் குணசேகரன் வழக்கு விசாரணைக்காக கோர்ட்டில் ஆஜராகி ஆள் மாறாட்டம் செய்வது தெரியவந்துள்ளது.
மேலும் நீதிமன்ற விசாரணையில் ஆள் மாறாட்டம் நடைபெற்றுது குறித்து வக்கீல் குமாஸ்தா திருஞானம் மற்றும் சீர்காழி கோர்ட் போலீஸ் ஆகியோரிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. ஆள்மாராட்டம் செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.