உத்தரபிரதேசத்தில் உள்ள முக்கிய பல்கலைக்கழகங்களில் ஒன்றான பூர்வாஞ்சல் பல்கலைக்கழகத்தில் ஏராளமான பாடப்பிரிவுகள் உள்ளன. இங்கு சமீபத்தில் டி.பார்ம் எனும் மருந்தியியல் படிப்பிற்கான பருவத்தேர்வுகள் நடைபெற்றன.
இதன் முடிவுகள் வெளியான நிலையில் தேர்வு முடிவில் உண்மைத் தன்மை இல்லை எனவும், பணம் வாங்கிக் கொண்டு பலரை தேர்ச்சி பெற வைத்ததாகவும் பல்கலைக்கழகத்தின் முன்னாள் மாணவரான திவ்யன்சு சிங் என்பவர் ஆர்டிஐ-யை தாக்கல் செய்திருந்தார்.
இதை அடுத்து, ஆர்டிஐ அதிகாரிகளால் சில மாணவர்களின் விடைத்தாள்களை ரேண்டமாக எடுத்துச் சரிபார்க்கப்பட்டன..அப்போது, விடைத்தாள்கள் முழுக்க ‘ஜெய் ஸ்ரீ ராம்’ என்ற வாசகம் இடம்பெற்றிருந்தது ஆர்டிஐ அதிகாரிகளை அதிர்ச்சியில் ஆழ்த்தியது.
மேலும் விடைத்தாள்களில் ஆங்காங்கே முன்னணி இந்திய மற்றும் சர்வதேச கிரிக்கெட் வீரர்களின் பெயர்களையும் எழுதி இருந்தனர்.கேட்கப்பட்ட ஒரு கேள்விக்கு கூட இந்த மாணவர்கள் சரியான பதிலை எழுதவில்லை.
இதையும் படிங்க: ஓர் ஆண்டுக்கு போக்குவரத்து மாற்றமா..!சென்னையில் எந்த பகுதியில் தெரியுமா?
இதில் என்னக் கொடுமை என்றால் இவர்கள் அனைவரும் 50 சதவீதத்துக்கும் அதிகமான மதிப்பெண்களைப் பெற்றுத் தேர்வில் வெற்றி பெற்று இருப்பது தன.தேர்ந்தெடுக்கப்பட்ட விடைத்தாள்களை மீண்டும் முறைப்படி திருத்தியதில், அனைவரும் பூஜ்ஜியம் மதிப்பெண் மட்டுமே பெற்றுள்ளார்கள்.
ஆர்டிஐ விவரங்களைப் பல்கலைக்கழக வேந்தரான மாநில ஆளுநருக்கு அனுப்பியதோடு, இந்த சம்பவம் குறித்து முழுமையான விசாரணை நடத்த வேண்டும் என்றும் திவ்யன்சு சிங் கோரிக்கை வைத்துள்ளார்.இந்த விவகாரம் குறித்து விசாரணை நடத்தக் குழு அமைக்கப்பட்டுள்ளது.
இந்த விவகாரத்தில் தொடர்புடைய 2 பேராசிரியர்களும் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர், மேலும் சம்பந்தப்பட்ட மற்வர்களிடலமும் விசாரணை நடைபெற்று வருகிறது.