கலைஞர் நூற்றாண்டை முன்னிட்டு சென்னையில் உள்ள சேப்பாக்கம் – திருவல்லிக்கேணி தொகுதியைச் சேர்ந்த பொதுமக்களுக்கு தமிழ்நாடு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
![](https://i0.wp.com/itamiltv.com/wp-content/uploads/2023/11/image-341.png?resize=1024%2C901&ssl=1)
ஒவ்வொரு நாளும் சேப்பாக்கம் – திருவல்லிக்கேணி தொகுதியில் உள்ள திமுக நிர்வாகிகளுடன் சென்று வார்டு வார்டாக பிரிக்கப்பட்டு அங்கிருக்கும் பொதுமக்களுக்கு புத்தாடைகள் உள்பட பல்வேறு நலத்திட்ட உதவிகளை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வழங்கி வருகிறார்.
![](https://i0.wp.com/itamiltv.com/wp-content/uploads/2023/11/image-340.png?resize=1024%2C584&ssl=1)
அந்தவகையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் அறிவுறுத்தலின்படி, மக்கள் பயன்பெறும் வகையில் திருவல்லிக்கேணி பகுதி, 119-ஆவது வட்டம், காட்டுக்கோவில் தெரு பகுதியைச் சேர்ந்த மக்களுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளை அமைச்சர் உதயநிதி வழங்கினார். இந்நிகழ்வில் தயாநிதிமாறன் எம்.பி மற்றும் திமுக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்
![](https://i0.wp.com/itamiltv.com/wp-content/uploads/2023/11/image-339.png?resize=1024%2C657&ssl=1)