அதிமுக பாஜக இடையே உள்ள உட்கட்சி பூசல் காமெடி சேனல் பார்ப்பது போல் பார்த்து செல்ல வேண்டியதுதான் என உதயநிதி ஸ்டாலின்(udhayanidhi stalin) கிண்டல் செய்துள்ளார்.
மதுரை கோரிப்பாளையம் பகுதியில் ஜைக்கா நிதியில் புதிதாக கட்டப்பட்டு வரும் அரசு ராஜாஜி மருத்துவமனையை இளைஞர் விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் திடீர் ஆய்வு மேற்கொண்டார்
தொடர்ந்து அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் செய்தியாளர்களை சந்தித்து கூறுகையில்;
ராஜாஜி மருத்துவமனையில் இப்போது ஆய்வு செய்துள்ள மருத்துவமனை கொரோனா காலகட்டத்தினால் தாமதமாகியுள்ளது அக்டோபர் மாதம் முழுமையாக முடிவடைந்து விடும் விரைவில் திறக்கப்படும் என கூறினார்..
அதிமுக பாஜக இடையே ஏற்படும் பிரச்சனை குறைத்து கேட்டதற்கு இதெல்லாம் நாடகம் எல்லாம் எல்லாரும் காமெடி பீசு தான் என்று தெரிவித்தார்.
மேலும் எய்ம்ஸ் மருத்துவமனை குறித்த கேள்விக்கு இப்போது டெண்டர் விடப்பட்டுள்ளது அங்கு போய் பாருங்கள் செங்கல் மட்டும் தான் இருக்கும் எய்ம்ஸ் குறித்து ரகசியத்தை சொல்லுங்கள் என கேட்டுள்ளேன் என்று கிண்டலாக கூறினார்.
மேலும் அதிமுக பாஜக இடையே நடைபெற்று வரும் மோதல் குறித்த கேள்விக்கு அதிமுக பாஜக இடையே உட்கட்சி பூசல் அவர்கள் ஓப்பனாகவே மிரட்டுகின்றனர்.”பா.ஜ.க.வுடன் அ.தி.மு.க. கூட்டணி இல்லை என்பது போன்ற செய்திகள் நேற்று தொலைக்காட்சி ஊடகங்களில் முதலிடம் பிடித்துள்ளன.
அதிமுக பாஜக இடையே உட்சி பூசல் நடைபெற்று வருகிறது கூ றிவிட்டு ஒரு காமெடி சேனல் போல் தான் பார்த்து செல்ல வேண்டும் என தெரிவித்தார்.