திருவாரூரில் திமுக தொண்டர் அமைத்த மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி அவர்களின் திருவுருவ சிலையை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் திறந்து வைக்காமல் சென்றதால் பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்ட சம்பவம் பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.
திருவாரூர் மாவட்டம், குன்னியூர் கிராமத்தில் வசித்து வருபவர் சுரேஷ்.இவர் பெட்ரோல் பங்க ஒன்றை நடத்தி வருகிறார்.
தீவிர திமுக விசுவாசியான இவர்,கடந்த ஒரு வருடத்திற்கு முன்பு மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி தனது வீட்டு வாசல் முன்பு அமைத்துள்ளார்.

இந்த சிலையைத் தமிழக முதலமைச்சர் திரு மு க.ஸ்டாலின் அல்லது அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆகியோரில் யாராவது ஒருவர் தான் இந்த பகுதிக்கு வருகை தரும் பொழுது இந்த சிலையைத் திறக்க வேண்டும் என விருப்பப்பட்டு உள்ளார்.
இந்த நிலையில் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு திருவாரூர் மாவட்டம் திருக்குவளைக்கு வருகை தந்த அமைச்சர் உதயநிதி குண்ணியூர் வழியாக பயணம் செய்துள்ளார்.

அப்பொழுது கருணாநிதியின் சிலையை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் திறந்து வைப்பார் என்று எதிர்பார்த்து சண்ட மேளம், நடனங்கள், என ஏற்பாடுகள் செய்யப்பட்டு அப்பகுதி மக்களையும் கூட்டி இருந்தால் சுரேஷ்.
இந்த நிலையில் அந்த வழியாகச் சென்று அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சிலையைத் திறக்காமல் அந்த இடத்திலிருந்து கடந்து சென்றார்.

இந்த சம்பவத்தால் கடும் ஆத்திரம் அடைந்த சுரேஷ் மற்றும் அவரது ஆதரவாளர்கள் திருவாரூர் மற்றும் திருத்துறைப்பூண்டி நடுச்சாலை பொன்னை ஒரு பகுதியில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டன.
தகவல் அறிந்து வந்த காவல்துறையினர் மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சு வார்த்தை நடத்தி அவர்களை அப்புறப்படுத்தினர்.இதனால் அந்த பகுதியில் சிறிது நேரம் பரப்பரப்பு ஏற்பட்டது.