இந்தியா தலைமை ஏற்று நடத்திய 18 வது உச்சி மாநாட்டில் டெல்லியில் நடைபெற்றது.
இந்த உச்சிமாநாட்டில் 30க்கும் மேற்பட்ட நாட்டுத் தலைவர்கள் மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்தின் உயர் அதிகாரிகள் மற்றும் 14 சர்வதேச அமைப்புகளின் தலைவர்கள் கலந்து கொண்டனர்.
அந்த வகையில்,இங்கிலாந்து பிரதமர் (Rishi Sunak) காலை டெல்லியில் உள்ள அக்ஷர்தாம் கோயிலுக்கு பிரார்த்தனை செய்ய வந்தார்.
இங்கிலாந்து பிரதமரின் வருகையை முன்னிட்டு கோவிலை சுற்றிலும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.
சுவாமி நாராயன் அக்ஷர்தாம் கோயிலுக்கு இன்று காலை சென்ற ரிஷி சுனக் அவரது மனைவி அக்ஷதா மூர்த்தியுடன் வந்தார்.
ரிஷி சுனக் உடன் அவரது மனைவி அக்ஷதா மூர்த்தியும் வழிபாடு செய்தார்.
ரிஷி சுனக் – அக்ஷதா மூர்த்தியின் படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.
சுவாமி நாராயன் அக்ஷர்தாம் கோயிலில் ஆரத்தி எடுத்து மண்டியிட்டு வழிபாடு செய்தார்.