ரஷியா – உக்ரைன் இடையேயான போர் தீவிரமடைந்துள்ள நிலையில் தற்போது ரஷியாவில் உள்ள கட்டடம் மீது உக்ரைன் ட்ரோன் தாக்குதல் நடத்தியுள்ளது.
சமீப காலமாக அமெரிக்கா, ஐரோப்பா உள்ளிட்ட நாடுகளுடன் உக்ரைன் நெருக்கம் காட்டி வருவதை ரஷ்யா விரும்பாத நிலையில் தனிநாடாக உருவான உக்ரைனை தன்னோடு இணைத்துக் கொள்ள ரஷ்யா கடுமையாக முயன்று வருகிறது.
இதன் காரணமாக இரு நாடுகளுக்கும் இடையே பல ஆண்டுகளாக மோதல் நீடித்து வந்த நிலையில் தற்போது உக்ரைன் மீது ரஷ்ய ராணுவம் போர் நடத்தி வருகிறது .
திட்டத்தட்ட 1 வருடத்திற்கு மேலாக உக்ரைன் – ரஷியா போர் நடந்து வரும் நிலையில் இரு நாட்டு ராணுவமும் தீவிரமாக சண்டையிட்டு வருகிறது . இந்த போரில் பொதுமக்கள் உள்பட பல்லாயிரம் பேர் உயிரிழந்துள்ளனர் . ஒருபக்கம் பல அப்பாவி உயிர்கள் மாண்டாலும் மறுக்கம் உக்ரைன் ரஷ்யா படைகள் மீது விடாது தாக்குதல் நடத்தி வருகிறது .
Also Read : தன்னாட்சி பொறியியல் கல்லூரிகளுக்கு கடிவாளம்? – அண்ணா பல்கலை. சிண்டிகேட் புதிய முடிவு..!!
ஆண்டுகள் பல கடந்தாலும் போரின் தாக்கம் மட்டும் குறையாமல் நடந்துகொண்டே இருக்கிறது. இதற்கிடையில் ரஷ்யா நாட்டில் உள்நாட்டு வன்முறைகளும் அதிகரித்து வருகின்றன .
இந்நிலையில் ரஷியாவில் உள்ள 38 மாடி கட்டடம் மீது உக்ரைன் ட்ரோன் தாக்குதல் நடத்தி உள்ளது . இதனால் கோபமடைந்த தன் ரஷியா உக்ரைனுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் கீவ் நகரில் ஆக்ரோஷமாக தாக்குதல் நடத்தி வருகிறது .
கீவ் நகரைக் குறி வைத்து ரஷியா ராணுவம் ஏவுகணை, ட்ரோன்கள் மூலம் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருவதாக தகவல் வெளியாகி உள்ளது .