ஆண்டுகளை கடந்து நடைபெற்று கொண்டிருக்கும் உக்ரைன் ரஷ்யா போரில் (Ukraine Fund ) கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள உக்ரைன் நாட்டிற்கு ரூ.4.5 லட்சம் கோடி நிதியுதவி வழங்க ஐரோப்பிய யூனியன் ஒப்புதல் அளித்துள்ளது .
சமீப காலமாக அமெரிக்கா, ஐரோப்பா உள்ளிட்ட நாடுகளுடன் உக்ரைன் நெருக்கம் காட்டி வருவதை விரும்பாத ரஷ்யா தனிநாடாக உருவான உக்ரைனை தன்னோடு இணைத்துக் கொள்ள முயன்று வருகிறது.
இதன் காரணமாக இரு நாடுகளுக்கும் இடையே பல ஆண்டுகளாக மோதல் நீடித்து வந்தது. இந்த நிலையில் உக்ரைன் மீது ரஷ்ய ராணுவம் போர் தொடுக்க ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் உத்தரவிட்டார்.
இதையடுத்து உக்ரைன் நாட்டின் (Ukraine Fund ) மீது ரஷிய படைகள் தாக்க தொடங்கியது. பதிலுக்கு உக்ரைன் ராணுவமும் தாக்குதல் நடத்தியது.
இந்த தாக்குதலில் இரு தரப்பிலும் பல ராணுவ வீரர்கள் பலியானதோடு பொது மக்களும் பலியாகினர். இதைத்தொடர்ந்து உக்கிரைனில் சிக்கித் தவிக்கும் மக்களை பல்வேறு நாடுகளும் மீட்டு வருகின்றன.
இந்நிலையில் உக்ரைனில் ரஷ்யா நடத்தி வரும் போர்த் தாக்குதலால் ஏராளமான குழந்தைகள் உட்பட பொதுமக்கள் பலரும் உயிரிழந்துள்ளனர் .
ஒருபக்கம் பல அப்பாவி உயிர்கள் மாண்டாலும் மறுக்கம் உக்ரைன் ரஷ்யா படைகள் மீது விடாது தாக்குதல் நடத்தி வருகிறது .
இந்த பக்கம் ரஷ்யாவும் தாக்குதல் நடத்த இரு நாடுகளுக்கும் இழப்பின் எண்ணிக்கைகள் அதிகரித்து கொண்டே செல்கிறது .
இதனை பார்த்த இரு நாடுகளின் நட்பு நாடுகள் போரை நிறுத்திக்கொள்ள இரு நாடுகளிடமும் பல முறை பேச்சுவார்த்தை நடத்தி வந்த நிலையிலும் போர் மட்டும் நின்றபாடில்லை .
ஆண்டுகள் கொண்டதாலும் போரின் தாக்கம் மட்டும் குறையாமல் நடந்துகொண்டே இருக்கிறது. இதற்கிடையில் ரஷ்யா நாட்டில் உள்நாட்டு வன்முறைகளும் அதிகரித்து வருகின்றன .
Also Read :https://itamiltv.com/rbi-stops-paytm-payments-bank-after-feb-29/
உக்ரைனின் அழகிய நகரங்கள் மீது ரஷ்யா அடுத்தடுத்து மனிதாபிமானமற்ற தாக்குதல்களை நடத்தி வரும் ரஷ்யாவின் கோபம் எப்போது தீர போகிறது என தெரியவில்லை .
இந்நிலையில் இந்த போரால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள உக்ரைனுக்கு ரூ.4.5 லட்சம் கோடி நிதியுதவி அளிப்பதற்கான திட்டத்துக்கு ஐரோப்பிய யூனியன் ஒப்புதல் அளித்துள்ளது.