இஸ்ரேல் மீது ஈரான் தாக்குதல் நடத்திய நிலையில் இன்னொரு போரை இந்த உலகம் தாங்காது என்று ஐ.நா கவலை தெரிவித்துள்ளது.
இஸ்ரேலுக்கும், பாலஸ்தீனத்துக்கும் இடையே கடந்த தொடர்ந்து போர் நடந்து வரும் நிலையில், பாலஸ்தீனத்தின் பெரும்பகுதிகள் சேதம் அடைந்து அங்குள்ள மக்கள் கடும் இன்னல்களுக்கு ஆளாகி வருவதாக செய்தி நிறுவனங்கள் தகவல்களை வெளியிட்டு வருகின்றன.
ஹமாஸ் படையினரும் இஸ்ரேல் மீது பதில் தாக்குதல Israel- Iran Attack நடத்தியபடி உள்ளனர்.
இஸ்ரேல் – பாலஸ்தீனம் போர் நிறுத்த நடவடிக்கைகளில் உலகநாடுகள் குறிப்பாக முஸ்லிம் நாடுகள் கூட அக்கறை காட்டவில்லை என்று மனித உரிமை ஆர்வலர்கள் பலரும் கருத்து பகிர்ந்து வந்தனர்.
இந்த நிலையில், பாலஸ்தீனத்துக்கு ஆதரவாக, இஸ்ரேல் ஞாயிற்றுக்கு கிழமை தாக்குதல் நடத்தியிருக்கிறது. 300க்கும் மேற்பட்ட ஏவுகணைகளையும், ட்ரோன் குண்டுகளையும் வீசி சுமார் 5 மணி நேரம் நடத்தப்பட்ட தாக்குதல் இஸ்ரேலை மட்டுமல்லாமல் அதன் கூட்டாளியான அமெரிக்காவையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியிருக்கிறது. ஈரானின் தாக்குதலுக்கு எதிராக இஸ்ரேலும், அமெரிக்காவும் சேர்ந்தே அதன் ஏவுகணைகளை இடைமறித்து அழித்தன.
இதையும் படிங்க: கோர தாக்குதல் நடத்தும் ஈரான் – பதில் தாக்குதல் நடத்த இஸ்ரேல் மறுப்பு..!!!
மேலும் இஸ்ரேலுக்கு ஆதரவாக அமெரிக்கா தனது போர்க்கப்பல்களை களமிறக்கியிருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இதன் காரணமாக 3ஆம் உலகப்போர் தொடங்கும் அபாயம் இருப்பதாக இணையவாசிகள் பலரும் கருத்து பகிர்ந்தனர்.இதனிடையே, ஞாயிற்றுக்கிழமை ஐ.நா.பாதுகாப்பு கவுன்சிலின் அவசரக் கூட்டம் பொதுச்செயலாளர் அண்டோனியோ குத்ரேஸ் தலைமையில் கூடியது. அப்போது பேசிய அவர்,
அமைதியை நிலைநாட்ட வேண்டிய பொறுப்பு நம் அனைவருக்கும் உள்ளது. தற்போது ஈரானின் நடவடிக்கை மூலம் மத்திய கிழக்கி பிராந்தியமோ, இந்த உலகமோ இன்னொரு போரை தாங்காது என்று கூறினார். இஸ்ரேல் மீது ஈரான் நடத்திய வான்வழி தாக்குதலுக்கு கண்டனமும் தெரிவித்தார்.
இதையும் படிங்க: இஸ்ரேல் – ஈரான் எல்லைகளில் நீடிக்கும் பதற்றம் – வெளியான சமீபத்திய தகவல்கள்..!!
மேலும், இஸ்ரேல் – ஹமாஸ் போரை உடனடியாக நிறுத்தவும், பிணைக் கைதிகளை நிபந்தனைகள் இன்றி விடுவிக்கவும் அவர் கேட்டுக் கொண்டார். மனிதாபிமான முறையில் காசாவுக்கு உதவிகள் சென்று சேர்வதை உறுதி செய்யவும் அவர் வலியுறுத்தினார்.
ஐ.நா.பொதுச்செயலாளரின் கருத்து குறித்து இணையவாசிகள் பலரும் கருத்து தெரிவித்திருக்கிறார்கள். ஈரான் ஏவுகணை தாக்குதல் நடத்தியதும், உடனடியாக போரை நிறுத்துங்கள் என்று கூறும் அண்டோனியோ குத்ரேஸ், இஸ்ரேல் – பாலஸ்தீன போரை நிறுத்துவதில் ஏன் உடனடியாக அக்கறை காட்டவில்லை என்று கேள்வி எழுப்பியுள்ளனர்.
இந்த நிலையில், ஈரான் தாக்குதலை முன்வைத்து பிரெஞ்சு ஜோதிடர் நாஸ்ட்ரடாம்ஸின் கணிப்பு பலிக்குமா என்றும் இணையத்தில் ஒரு தரப்பினர் பதிவிட்டு வருகின்றனர். 16ஆம் நூற்றாண்டை சேர்ந்த நாஸ்ட்ரடாம்ஸ், தனது கணிப்புகளை எழுதியுள்ள தி பிராபசிஸ் புத்தகத்தில் 2024ஆம் ஆண்டில் உலகம் மிகப்பெரிய கடற்படை போரை பார்க்க நேரிடும் என்று கூறியுள்ளார்.
இஸ்ரேலுக்கும் ஆதரவாக அமெரிக்கா தனது போர்க்கப்பல்களை நிறுத்தியிருப்பதும், இஸ்ரேல் மீது ஈரான் தாக்குதல் நடத்தியிருப்பதும் மூன்றாம் உலகப்போருக்கு கொண்டு செல்லும் என்றும் அதனைத்தான் நாஸ்ட்ரடாம்ஸ் கணிப்பு சொல்வதாகவும் இணையவாசிகள் பதிவிட்டுள்ளனர்.