திமுக விசிக இடையே கடும் மோதல் போக்கு இருப்பதாக பல்வேறு செய்திகள் நீண்ட நாட்களாக ஊடகங்களில் வந்த வண்ணம் இருந்தன.
யாரோ சிலர் கிளப்பிவிட்ட சர்சைக்கு இன்றளவும் திமுக ஐ.டி விங் ஆதரவாளர்களும், விசிக இரண்டாம் கட்ட தலைவர்களும் மாறி மாறி பதிவிட்டு இதனை சமாளித்துவந்தனர்.
இந்நிலையில் முதல்வரை சந்தித்த திருமா தெளிவாகவே கூறிவிட்டார். அதிகாரத்தைப் பகிர்ந்தளிப்பதுதான் உண்மையான ஜனநாயகம் என்றும் மது ஒழிப்பு கோரிக்கை கூட்டணியைப் பாதித்தாலும் பரவாயில்லை என்றும் பேசிவந்த வி.சி.க., தலைவர் திருமாவளவன் முதல்வருடனான சந்திப்புக்குப் பிறகு `கூட்டணி உறவில் எந்த விரிசலும் இல்லை’ என்று கூறியிருப்பது பல்வேறு சந்தேகங்களைக் கிளப்பியுள்ளது.
எதற்கு இவ்வளவு அவசரமாக திருமாவை முதல்வர் சந்திக்க அழைத்தார் என்று விசாரிக்கும் போதுதான், அரசியல் விமர்சகர்களால் சில சூட்சமங்கள் அவிழ்க்கப்படுகின்றன.
முதல்வர் சந்திப்பின்போது வெளிநாடு பயணம் குறித்த பேச்சுடன் தொடங்கி மெல்ல மெல்ல மது ஒழிப்பு மாநாட்டு விவகாரத்திற்கு வந்தார்களாம். எங்கள் தரப்பிலிருந்து மாநாட்டில் பங்கேற்க தி.மு.க-வுக்கு எந்த அழைப்பும் விடுக்காமலேயே ஆர்.எஸ் பாரதி மற்றும் டி.கே.எஸ் இளங்கோவன் பங்கேற்பர் என முதல்வர் சொன்னதை நாங்கள் எதிர்பார்க்கவில்லை என்று கூறுகிறார்கள் விசிக முக்கிய புள்ளிகள்.
சரி எதற்கு வாண்டடாக மது ஒழிப்பு மாநாட்டுக்குப் பிரதிநிதிகளை அனுப்ப முதல்வர் முடிவெடுத்தார் என்ற கேள்விக்கு அதிமுக-வை மாநாட்டில் பங்கேற்கவிடாமல் தடுப்பதுதான் நோக்கம் என்கிறார்கள் அரசியல் விமர்சகர்கள். அதிகாரப் பகிர்வின் ஆதங்கத்தை வெளிப்படுத்தியதும், வெளிப்படையாக மதுவிலக்கு மாநாட்டை பற்றி பேசியதையும் திமுக மேலிடம் விரும்பவில்லையாம்.
இதையும் படிங்க : Tukaram : மீசை வரும் வரை காத்திருந்த படக்குழு!
இந்நிலையில் அதிமுக மாநாட்டு வந்து கூட்டணியில் துண்டு விழக் கூடாது என்றால் சமரசப் பேச்சு அவசியம் என அறிந்தே தான் இந்த பேச்சுவார்த்தை மூவ் நடந்துள்ளதாம். இதன் மூலம், திமுக மாநாட்டுக்கு வந்தால் அங்கு அதிமுக வராது. ஆகவே அதிமுக-வை அழைக்க முடியாத நிலையை உருவானால் கூட்டணி முறிவுக்கு பேச்சே இல்லை என பக்கா பிளான் போட்டு சாதித்துள்ளது திமுக.
அதன் வெளிப்பாடு தான் மது ஒழிப்பு மாநாட்டு மேடையில் யாரெல்லாம் இருப்பார்கள் எனச் செய்தியாளர்கள் கேட்ட கேள்விக்கு,
நாங்கள் திமுக-வை மாநாட்டுக்கு அழைக்கவில்லை, ஆனால் அவர்கள் பங்கேற்பதாகச் சொல்லியிருக்கிறார்கள். இதனை அதிமுக எப்படிப் பார்க்கிறதெனத் தெரியவில்லை. எனவே மாநாட்டில் யாரெல்லாம் பங்கேற்பார்கள் என்பதைக் கட்சியின் முன்னணி நிர்வாகிகளுடன் கலந்தாலோசித்து முடிவெடுப்போம் என்று திருமாவளவன் குழப்பமான ஒரு பதிலை நிரூபர்களுக்கு கொடுத்தார்.
திமுக-வுக்கு எதிரான மாநாடா? அல்லது யாருக்கு எதிராக மாநாடு? என்று கேட்டால், இதை பொது பிரச்சனை என்ற கணக்கில் செய்கிறோம் என்று கூறுகிறார்கள்.
ஏன் மூன்று ஆண்டுகால திமுக ஆட்சியில் வேறு எந்த பிரச்சனைகளும் நடக்கவே இல்லையா?
திடீரென கள்ளக்குறிச்சி கள்ளச்சாரயப் பிரச்சனையில் தான் விசிகவுக்கு ஞானேதயம் வந்திருக்கிறதா? என்ற கேள்வியும் எழுகிறது.
சரி மதுவிலக்கு என்றால் யாரோ அதை செயல்படுத்தப்போய் தானே எதிர்க்கிறார்கள். அந்த “யாரோ” என்பவர்களை பகைத்துக்கொள்ள விரும்பவில்லை என்றால் ஏன் இந்த மது மற்றும் போதை ஒழிப்பு மாநாட்டு அறிவிப்பு?
2026 தேர்தலுக்கு இன்னும் 18 மாதங்கள் இருந்தாலும், சீட்டு பேரத்திற்காகத் தான் இந்த மாநாடு என்ற விமர்சனமும் இப்போதைய கணக்கில் வராது. அமைச்சர் முத்துசாமி படிப்படியாக மதுக்கடைகள் குறைக்கப்படும் என்று கூறுகிறார்கள், பிறகு எதற்கு இந்த மாநாடு?
உண்மையிலேயே குழப்பத்தில் இருப்பது யார் என்ற கேள்வி தான் நமக்கு எழுகிறது.