தொழில்நுட்பம் வளர வளர பெண்களுக்கு எதிரான குற்றங்களும் அதிகரித்து வருவதாக எம். பி. கனிமொழி(Kanimozhi) குற்றம்சாட்டியுள்ளார்.
சென்னை நுங்கம்பாக்கத்திலுள்ள தனியார் நட்சத்திர ஓட்டலில் (தாஜ் கோரமண்டல்) தமிழ்நாடு மாநில மகளிர் ஆணையம் சார்பில் பெண்களுக்கு எதிரான குற்றங்களில் உலகளாவிய போக்குகள் என்ற தலைப்பில் சர்வதேச கருத்தரங்கம் தற்போது நடைபெற்று வருகிறது.
இந்த கருத்தரங்கில் சட்டத்துறை அமைச்சர் ரகுபதி, ஏம்.பி.கனிமொழி கருணாநிதி, அமைச்சர் கீதா ஜீவன் பங்கேற்றனர்.
அப்போது நிகழ்ச்சியில் பேசிய எம்.பி. கனிமொழி..
பெண்கள் உரிமைகளுக்கு தமிழ்நாடு அதிகம் போராடி உள்ளது.அவர்களில் ஒருவர் பெரியார். உங்களுக்கும் உங்கள் கனவுகளுக்கும் இடையில் எந்த தடை வந்தாலும் அதை பெண்கள் தகர்த்து எரிந்து கனவை அடையவேண்டும் வேண்டும் என்று கூறுகிறார்.
தொழில்நுட்பம் வளர வளர பெண்களுக்கு எதிரான குற்றங்களும் அதிகரித்து வருகிறது.ஒரு பெண் பத்திரிகையாளர் ஒரு செய்தியை தன் சமூக வலைத்தளத்தில் பதிவு செய்தால் போதும் அவருக்கு அனைத்து விதமான மிரட்டல்களும் வருகிறது.
பெண்களை எவ்வாறு சகித்து கொள்ளுவது என்பது இந்த சமூகத்திற்கு தெரியவில்லை.இன்னும் சில அரசாங்கம் பெண்களை சமையல் அறையிலே வைக்க வேண்டும் என்று நினைக்கின்றனர்.
அதற்காக தான் பெண்களுக்கு 33 சதவீத இடஒதுக்கீடு வேண்டும் என்று கேட்கிறோம். அதனை உடனடியாக அமல்படுத்தவேண்டும் என்று கூறுகிறோம்.கல்வி என்பது பெண்களுக்கு கொடுக்கப்படும் சலுகை அல்ல பெண்களின் உரிமை.
மூன்றில் ஒரு பெண் அவர்களுக்கு எதிரான குற்றங்களை எதிர் கொல்குகின்றனர். ஆனால் அதில் ஒரு பெண் தான் அது குறித்து புகார் அளிக்கின்றனர்.என்று தெரிவித்தார்.