சன்னி லியோனிக்கு மத்திய அமைச்சர் எச்சரிக்கை..!

சன்னி  லியோன் நடனத்தில் வெளியாகியுள்ள மியூசிக் ஆல்பம் பாடல், இந்து மத உணர்வுகளை புண்படுத்தும் வகையில் இருப்பதாக கண்டனம் வலுத்துள்ள நிலையில் மத்திய பிரதேச அமைச்சர், நடிகை சன்னி லியோனுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளதுடன், கெடுவும் விதித்துள்ளார்.

சன்னி லியோன் நடனத்தில் வெளிவந்துள்ள மியூசிக் ஆல்பம் சாங், இந்து மத உணர்வுகளை புண்படுத்தும் வகையில் இருப்பதாக கண்டனம் எழுந்துள்ள நிலையில் மத்திய பிரதேச அமைச்சர், நடிகை சன்னி லியோனுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளதுடன், கெடுவும் விதித்துள்ளார்.

நடிகை சன்னி லியோன் மற்றும் கனிகா கபூர் ஆகியோர் நடனமாடி, கடந்த சில நாட்களுக்கு முன்னர் சரிகம மியூசிக் நிறுவனத்தால் வெளியிடப்பட்ட இசை ஆல்பம் சாங் Madhuban mein Radhika. நடிகை சன்னி லியோன் இந்த பாட்டுக்காக மிகவும் கவர்ச்சிகரமான நடனத்தை ஆடியிருக்கும் நிலையில் இந்த பாட்டு ரிலீஸ் ஆனதில் இருந்தே கடுமையான எதிர்ப்பை சந்தித்து வருகிறது.

உத்தரப் பிரதேசம் மாநிலம் மதுராவைச் சேர்ந்த இந்து மத சாமியார்கள் சன்னி லியோன்வின் பாட்டு இந்து மத உணர்வுகளை புண்படுத்தியுள்ளதாகவும், அறுவறுக்கத்தக்க ஆட்டத்தை ராதையின் பெயரால் அரங்கேற்றியிருப்பதாகவும் கூறி இந்த பாட்டை உடனடியாக நீக்க வேண்டும் என அவர்கள் கடந்த சனிக்கிழமையன்று போராட்டத்தில் குதித்தனர்.

இந்நிலையில் மத்திய பிரதேச மாநில உள்துறை அமைச்சரான நரோதம் மிஸ்ரா, சன்னி லியோன் வின் பாடலுக்காக நடிகைக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார். மேலும் சன்னி லியோன் , இந்த பாடலை பாடிய ஷாரிஃப் மற்றும் தோஷி ஆகியோர் இதற்கான பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும் எனவும் அடுத்த 3 நாட்களுக்குள் நடிகை சன்னி லியோன் தனது நடன ஆல்பம் சாங்கினை நீக்க வேண்டும் என கெடு விதித்துள்ளதுடன் இல்லையென்றால் அவர் மீது போலீசார் எஃஐஆர் பதிவு செய்து மேல் நடவடிக்கை எடுப்பார்கள் என அவர் எச்சரித்துள்ளார்.

Total
0
Shares
Related Posts