மத்திய அமைச்சர் நிதின் கட்கரி(nithin gadkari) ஏழுமலையான் கோவிலில் குடும்பத்துடன் சாமி தரிசனம் செய்தார்.
மத்திய நெடுஞ்சாலைகள் மற்றும் தரைவழி போக்குவரத்து துறை அமைச்சர் நிதின் கட்கரி(nithin gadkari) திருப்பதி ஏழுமலையான் கோவிலில் இன்று அதிகாலை தோமாலை சேவையில் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தார்.
பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக நேற்று மாலை திருப்பதிக்கு வந்த நித்தின் கட்கரி திருமலைக்கு சென்று இரவு தங்கினார்.
தொடர்ந்து இன்று அதிகாலை கோவிலுக்கு சென்ற அவர் தோமாலை சேவையில் கலந்து கொண்டு குடும்ப உறுப்பினர்களுடன் ஏழுமலையானை வழிபட்டார்.
சாமி கும்பிட்ட பின் தேவஸ்தானம் சார்பில் அவருக்கு தீர்த்த பிரசாதங்கள் நினைவு பரிசுகள் ஆகியவற்றை தேவஸ்தான அதிகாரிகள் வழங்கினர்.
தேவஸ்தான வேத பண்டிதர்கள் நித்தின் கட்கரி மற்றும் அவருடைய குடும்பத்தாருக்கு வேத ஆசி வழங்கினர்.