போலி மதிப்பெண் சான்றிதழ் மோசடியில் பாஜக எம்.எல்.ஏ-வுக்கு 5 ஆண்டுகள் சிறை..- எம்.எல்.ஏ பதவியும் பறிபோனது..!

போலி மதிப்பெண் சான்றிதழ் கொடுத்து கல்லூரியில் சேர்ந்ததாக எழுந்த புகாரையடுத்து பாஜக எம்.எல்.ஏவுக்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கி உத்தரபிரதேச சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

உத்தர பிரதேச மாநிலம் அயோத்தியாவில் உள்ள கோஸ்கஞ்ச் சட்டமன்ற தொகுதியில் பா.ஜனதா சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர் இந்த்ரா பிரதாப் என்ற கபு திவாரி. இவர் கல்லூரியில் போலி சான்றிதழ் கொடுத்து சேர்ந்ததாக புகார் எழுந்தது.

கபு திவாரி மீதான வழக்கை சிறப்பு நீதிமன்றம் விசாரித்து வந்தது. விசாரணை முடிவில் போலி சான்றிதழ் வழங்கியது உறுதியானது. இதனால் நீதிமன்றம் அவருக்கு ஐந்தாண்டு சிறைத்தண்டனை வழங்கி உத்தரவிட்டது.

இதனால் கபு திவாரி சட்டமன்ற உறுப்பினர் பதவியில் இருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

Total
0
Shares
Related Posts