உத்தரப் பிரதேசத்தில், தனது மனைவியுடன் ஏற்பட்ட தகராறில் 3 வயது மகனை தந்தையே கொடூரமாக கொலை (man kills son) செய்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
உத்தரப் பிரதேச மாநிலத்தில் உள்ள சிட்டிசாபூர் கிராமத்தைச் சேர்ந்த நபர் ஷோசந்திரகிர் லோதி. இவருக்கு 3 வயதில் ராஜ் என்ற மகன் இருந்துள்ளர்.
இந்நிலையில், புதன்கிழமை இரவு, குடிபோதையில் சந்திரகிஷோர் லோதி வீட்டிற்குச் சென்றுள்ளார். அப்போது, கணவன்-மனைவி இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. அந்த தகராறு முற்றிய நிலையில், ஆத்திரமடைந்த சந்திரகிஷோர் லோதி தனது 3 வயது மகன் ராஜை கோடரியால் வெட்டி கொடூரமாக கொலை (man kills son) செய்துள்ளார்.
பின்னர், மகன் ராஜின் உடலை அருகில் இருந்த ஒரு விவசாய வயலில் புதைத்துள்ளார்.
இதனைக்கண்டு, அதிர்ச்சியில் உறைந்த அவரின் மனைவி உடனடியாக இது குறித்து காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இந்நிலையில், அவர் அளித்த புகாரின் அடிப்படையில், ஷோசந்திரகிர் லோதியை போலீசார் கைது செய்துள்ளனர்.
மேலும், உயிரிழந்த சிறுவனின் உடலை மீட்டு உடற்கூராய்விற்கு அனுப்பி வைத்துள்ளனர். இந்நிலையில், தந்தையே மகனை கொலை செய்த இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.