கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொள்ளாதவர்கள் அமெரிக்க ராணுவத்தில் இருந்து பணி நீக்கப்படுவார்கள் என அமெரிக்க ராணுவ செயலர் கிறிஸ்டின் வார்முத் எச்சரித்துள்ளார்.
அமெரிக்காவில் கொரோனா தொற்று அதிகரித்துள்ள நிலையில் தடுப்பூசி செலுத்துவோரின் எண்ணிக்கை குறைந்த அளவிலேயே உள்ளது. இதனால் தடுப்பூசி செலுத்திக்கொள்வோரின் எண்ணிக்கையை அதிகரிப்பதற்காக பல்வேறு நடவடிக்கைகளை அமெரிக்க அரசு மேற்கொண்டு வாகிறது.
அதன் ஒரு பகுதியாக தடுப்பூசி செலுத்திக்கொள்ளாத ராணுவத்தினர் உடனடியாக பணி நீக்கம் செய்யப்படுவார்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் சுமார் 3,000 பேர் வேலை இழக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. ஏற்கெனவே கடற்படை, விமானப்படையை சேர்ந்த சுமார் 650 வீரர்கள் தடுப்பூசி போட்டுக்கொள்ளாத காரணத்தால் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.