திமுக எம்பி ஆ.ராசாவை மிரட்டும் வகையில் பேசிய கோவை மாவட்ட பாஜக தலைவர் உத்தம ராமசாமி கைது செய்யப்பட்ட நிலையில், 15 நாள் நீதிமன்ற காவலில் வைக்கப்பட்டுள்ளார்.
திமுக எம்பி ஆ.ராசாவை கண்டித்து இரு தினங்களுக்கு முன் கோவையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் `தைரியம் இருந்தால் கோவையில் கால் வைத்து பார்’ உள்ளிட்ட சில காட்டமான வார்த்தைகளுடன் பாலாஜி உத்தமராமசாமி பேசியிருந்தார்.
இது குறித்த வீடியோ சமூக வலைதளங்களில் வெளியானதை தொடர்ந்து த.பெ.தி.க.வினர் அளித்த புகாரின் பேரில் அவர் மீது 3 பிரிவுகளில் வழக்குப்பதிவு போலீசார் கைது செய்தனர். பாலாஜி உத்தமராமசாமி கைதை கண்டித்து, பாஜக தொண்டர்கள் சாலை மறியலில் ஈடுபட முயன்றதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
தடுப்புகளை அமைத்து காவல்துறையினர் பாதுகாப்பை பலப்படுத்தி உள்ளனர். இந்த நிலையில் பாலாஜி உத்தமராமசாமிக்கு 15 நாள் நீதிமன்ற காவலில் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
கோவை மாவட்ட பாஜக தலைவர் உத்தம ராமசாமி கைது செய்திருப்பது வன்மையாக கண்டிக்கத்தக்கது என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, எம்.எல்.ஏ. வானதி சீனிவாசன் ஆகியோர் கண்டனம் தெரிவித்துள்ளன.
இதனை தொடர்ந்து கைது செய்யப்பட்டவர்களுக்கு தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தனது சமூக வலைதளத்தில் பதிலளித்துள்ளார். அவர் தனது ட்விட்டரில், “சூத்திரர்களை விபச்சாரிகளின் மகன்கள்” என்ற கருத்துக்காக ஏ ராஜாவைக் கண்டித்ததே ராமசாமியின் ஒரே தவறு” என்று எழுதினார்.இந்துக்களை தொடர்ந்து திமுக தாக்குவதாகவும் ,சமூகத்தை சீர்குலைக்கும் ஆ.ராஜா மீது ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை என்று திமுக அரசை விமர்சித்தார்.