லக்னோ-அயோத்தி நெடுஞ்சாலையில் இன்று நிகழ்ந்த சாலை விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 6 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
குஜராத்தின் அகமதாபாத்தில் இருந்து உத்தரப் பிரதேசத்தின் அயோத்திக்கு குடும்பத்துடன் சென்ற கார் ஒன்று, நெடுஞ்சாலையின் ஓரத்தில் நிறுத்தப்பட்டிருந்த கண்டெய்னர் லாரி மீது பயங்கர வேகத்தில் மோதி விபத்துக்குள்ளானது.
இந்த கோர விபத்தில் ஒரு தம்பதியர், இரண்டு குழந்தைகள் உள்பட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 6 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இவ்விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.