Udhayam Theatre Chennai | சென்னையின் அடையாளமாக திகழ்ந்து வந்த உதயம் திரையரங்கம் மூடப்படுவதற்கு வைரமுத்து உருக்கம் தெரிவித்து கவிஞர் வைரமுத்து போட்டுள்ள பதிவு இணையத்தில் வைரலாகி வருகிறது.
அசோக் நகரில் 1983ம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்தத் திரையரங்கில் உள்ள இந்த திரையரங்கில் உதயம், மினி உதயம், சந்திரன், சூரியன் என நான்கு ஸ்கிரீன்கள் அமைந்திருந்தன.
முன்னணி நடிகர்களான ரஜினிகாந்த், விஜய், அஜித்-ன் படங்கள் வெளியாகும்போது கொண்டாட்டங்கள் நிறைந்திருக்கும்.
நீண்ட காலமாகியும் தியேட்டரின் உள்கட்டமைப்பு வசதிகளை அந்த நிர்வாகம் புதுப்பிக்காமல் இருந்ததால் பார்வையாளர்கள் எண்ணிக்கையும் அங்கு குறைந்தே காணப்பட்டது.
இதையும் படிங்க: சிறுமி டானியாவுக்கு Housing Finance
இத்தகைய சென்னை அசோக் நகரின் அடையாளமாக திகழ்ந்த உதயம் திரையரங்கம் நிரந்தரமாக மூடப்படுகிறது.
இந்த நிலையில், உதயம் திரையரங்கம் ஒரு பிரபல கட்டுமான நிறுவனத்திற்கு விற்கப்பட்டுள்ளது.
அங்கு அடுக்குமாடி குடியிருப்பு கட்டிடம் கட்டப்படவுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
இந்த செய்தி திரைதுறையினர் மத்தியிலும் , ரசிகர்கள் மற்றும் பொதுமக்கள் மத்தியிலும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது,
இந்த நிலையில்,சென்னையின் அடையாளமாக திகழ்ந்து வந்த உதயம் திரையரங்கம் மூடப்படுவதற்கு உருக்கம் தெரிவித்து கவிஞர் வைரமுத்து போட்டுள்ள பதிவு வைரலாகி வருகிறது.
இதையும் படிங்க: TN Assembly Issue | ‘துணைத்தலைவர் இருக்கை விவகாரம்..” ஜெயக்குமார் ‘நச்’ பதிலடி!
வைரமுத்து பதிவிட்டுள்ள ட்விட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:
ஒரு கலைக்கூடம் மூடப்படுகிறது;
இதயம் கிறீச்சிடுகிறது
முதல் மரியாதை, சிந்து பைரவி,
பூவே பூச்சூடவா, புன்னகை மன்னன்
ரோஜா என்று
நான் பாட்டெழுதிய
பல வெற்றிப் படங்களை
வெளியிட்ட உதயம் திரைவளாகம்
மூடப்படுவது கண்டு
என் கண்கள்
கலைக் கண்ணீர் வடிக்கின்றன
மாற்றங்களின்
ஆக்டோபஸ் கரங்களுக்கு
எதுவும் தப்ப முடியாது என்று
மூளை முன்மொழிவதை
இதயம் வழிமொழிய மறுக்கிறது
இனி
அந்தக் காலத் தடயத்தைக்
கடக்கும் போதெல்லாம்
வாழ்ந்த வீட்டை விற்றவனின்
பரம்பரைக் கவலையோடு
என் கார் நகரும்
நன்றி உதயம்
முன்னதாக இதேபோல் சமீபத்தில் திருவல்லிக்கேணியில் உள்ள சாந்தி திரையரங்கம் இடிக்கப்பட்டு அங்கு வணிக வளாகக் கட்டடம் கட்டப்பட்டு இயங்கி வருகிறது.
அதைத் தொடர்ந்து தற்போது உதயம் திரையரங்க கட்டடமும் இடிக்கப்படவுள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளது.