பத்மஸ்ரீ விருது-பத்மஸ்ரீ விருது அறிவிக்கப்பட்டுள்ள தமிழக கிராமிய நடனக்கலைஞர் பத்ரப்பன் அவர்களுக்கு என் மனமார்ந்த வாழ்த்துகளையும், பாராட்டுக்களையும் தெரிவித்துக்கொள்கிறேன் என்று கோவை பாஜக தெற்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் வானதி வாழ்த்து தெரிவித்து உள்ளார்.
கலை, சமூகப் பணி, பொதுசேவை, அறிவியல், பொறியியல், வர்த்தகம், தொழில், மருத்துவம், இலக்கியம், கல்வி, விளையாட்டு, சிவில் சர்வீஸ் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் தலைசிறந்து விளங்கும் நபர்களுக்கு
ஆண்டுதோறும் நாட்டின் உயரிய விருதுகளான பத்ம விபூஷண், பத்ம பூஷண், பத்மஸ்ரீ ஆகியவை வழங்கப்பட்டுவருகிறது.
அந்தவகையில்,கோவையைச் சேர்ந்த சகோதரர் திரு.பத்ரப்பன் அவர்கள் வள்ளி கும்மி கிராமிய நடனக்கலையில் சிறப்பான நடனத்திறமையை வெளிப்படுத்தியதற்கும்,
பெண்களுக்கு சிறப்பாக வள்ளி கும்மி கிராமிய நடனக்கலை பயிற்சி அளித்ததற்காகவும் மத்திய அரசு பத்மஸ்ரீ விருது வழங்கி கௌரவித்துள்ளது.
இதையும் படிங்க:http://75th Republic Day-“மேஜிக்” ஓவியத்தில் தெரியும் தேசியக்கொடி!
இந்த நிலையில், பத்மஸ்ரீ விருது அறிவிக்கப்பட்டுள்ள தமிழக கிராமிய நடனக்கலைஞர் பத்ரப்பன் அவர்களுக்கு கோவை பாஜக தெற்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் வானதி ஸ்ரீனிவாசன் வாழ்த்து தெரிவித்து வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில்..
கொங்கு மண்டலத்தின் பாரம்பரிய நாட்டுப்புற நடனமான புகழ்பெற்ற வள்ளி கும்மியின் நடனக் கலைஞரும் நடனத்தை கற்று தரும் குருவாக இருக்கும்,
கோவையை சார்ந்த திரு.பத்ரப்பன் அவர்களுக்கு பத்மஸ்ரீ விருதை வழங்கிய பாரதபிரதமர் மோடி அவர்களின் தலைமையிலான மத்திய அரசிற்கு நெஞ்சார்ந்த நன்றிகள்.
இந்த விருது தமிழகத்தில் உள்ள நாட்டுப்புற கலைக்கு கிடைத்த மிகப்பெரிய அங்கீகாரம் ஆகும். 87 வயதான திரு. பத்ரப்பன் அவர்கள் தனது நடனம் மூலம் இந்திய வரலாறு மற்றும் சமூகப் பிரச்சினைகளை எடுத்துரைத்தவர்.
இதையும் படிங்க:https://x.com/ITamilTVNews/status/1750774480673341735?s=20
கும்மி நடனத்தில் பெண்களுக்கு சிறப்பான பயிற்சி அளித்தவர் என்பது குறிப்பிடக்கது. கொங்கு மண்டலத்தின் பெருமையான வள்ளி கும்மியின் நடனத்தின் புகழை பாரதம்
முழுவதும் பரவச்செய்த மதிப்பிற்குரிய திரு.பத்ரப்பன் அவர்களுக்கு எனது வாழ்த்துக்களையும் நன்றிகளையும் தெரிவித்து கொள்கிறேன்.
மேலும் ,பாமர மக்களை தேடி தேடிச் சென்று பத்மஸ்ரீ விருதுஅளித்து கெளரவிக்கும் பாரதப்பிரதமர் திரு.நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசுக்கு மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன்” என்று வானதி ஸ்ரீனிவாசன் குறிப்பிட்டுள்ளார்.