ஓணம் பண்டிகைக்கு மலையாளத்தில் வாழ்த்து சொன்ன முதல்வர் தீபாவளிக்கும் வாழ்த்து சொல்வாரா?என வானதி ஸ்ரீனிவாசன்(vanathi srinivasan) கேள்வியெழுப்பியுள்ளார்.
கேரளா மாநிலம் மட்டுமின்றி உலகம் முழுவதும் மலையாள மொழி பேசும் மக்கள் வசிக்கும் பகுதிகளில் ஓணம் பண்டிகை விமர்சையாக கொண்டாடப்பட்டது.
அந்த வகையில்,கோவை மாவட்ட பாஜக மகளிரணி தலைவர் திருமதி.ஜெய் ஸ்ரீ குன்னத் அவர்களின் இல்லத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஓணம் பண்டிகை விழாவில் கோவை தெற்கு தொகுதி தமிழக சட்டமன்ற உறுப்பினர் வானதி ஸ்ரீனிவாசன் கலந்து கொண்டார்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த வானதி, ஓணம் பண்டிகையை முன்னிட்டு தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் கேரள மக்களுக்கு மலையாள மொழியில் தனது வாழ்த்து தெரிவித்திருந்த கேள்விக்கு,ஓணம் பண்டிகைக்கு மலையாளத்தில் வாழ்த்து சொன்ன முதல்வர் ,தீபாவளிக்கும் வாழ்த்து சொல்வாரா?என்று கேள்விஎழுப்பியுள்ளார்.
மேலும் தமிழக முதல்வர் தீபாவளிக்கும் கூட இவ்வாறு வாழ்த்து தெரிவித்தால் அவர் அனைவருக்கும் சமமான முதல்வராக இருக்கிறார் என்பதற்க்கு அத்தாட்சியாக இருக்கும் என்று தெரிவித்தார்.