திமுகவுக்கு வாக்களிக்க வேண்டாம் என ஆடியோ வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்திய வேதபாடசாலை நிர்வாகியை திமுகவினர் தாக்கியதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசத்தை அடுத்த களஞ்சேரியில், சீதாராமன் என்பவர் ஸ்ரீவேத வித்யா குருகுலம் என்னும் வேத பாடசாலை நடத்தி வருகிறார். இந்த பாடசாலையில் 20க்கும் மேற்பட்டோர் வேத பாடம் படித்து வருகின்றனர்.
இந்த நிலையில், சீதாராமன், திமுகவுக்கு வாக்களிக்க வேண்டாம், பாஜகவுக்கு வாக்களியுங்கள் என்று பேசி வெளியிட்ட ஆடியோ சமூக வலைதளங்களில் வெளியாகியது இதனைத் தொடர்ந்து ஞாயிற்றுக்கிழமை, நடைபயிற்சி என்ற சீதாராமனை திமுக அனுதாபிகள் 2 பேர் தகாத வார்த்தைகளில் திட்டியதாக, சீதாராமன் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதில், தான் ஆடியோ ஒன்றை வெளியிட்டேன்; அதற்காக நான் நடை பயிற்சி சென்றபோது என்னை அடித்து காட்டுக்குள் இழுத்துச் சென்று தகாத வார்த்தைகளால் திட்டினர். ஒருவாரம் வாயைப் பொத்திக் கொண்டு இரு என மிரட்டினார்கள்.
இது அராஜக திமிர்.
இதையும் படிங்க: பெருந்தலைவர் காமராஜரை விட இளங்கோவன் என்ன பெரிய ஆளா..? செல்லூர் ராஜூ விமர்சனம்..!
இதுபோல பயமுறுத்தினால் எல்லோரும் அடங்கிவிடுவார்கள் என்று நினைக்கிறார்கள் . நாம் பயப்படக்கூடாது; இம்முறை நிச்சயமாக திமுகவை தோற்கடிக்க வேண்டும். அப்போத்தான் சாதுக்களும், பொதுமக்களும் அமைதியாக வாழ முடியும் என்று வீடியோவில் பேசியதாகக் கூறப்படுகிஅது.
இந்த வீடியோ வெளியானதால் பல்வேறு தரப்பினரும், சீதாராமனைத் தாக்கியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர். ஆனால் சீதாரமன் தரப்பில் இருந்து எவ்வித புகாரும் அளிகப்படவில்லையாம். ஆனாலும் இதுகுறித்து போலீஸார் விசாரணை நடத்தி வருவதாக தெரிவித்துள்ளனர்.
திமுக தரப்பிலோ, சீதாராமன் மீதாத தாக்குதலுக்கும் தங்களுகும் தொடர்பு ஏதும் இல்லை என்று தெரிவித்துள்ளனர். இந்த பரபரப்புக்கு இடையே, மயிலாடுதுறை பா.ம.க வேட்பாளர் ஸ்டாலின், சீதாராமனை நேரில் சந்தித்து ஆறுதல் கூறியுள்ளார்.