Velmurugan– நாடாளுமன்ற தேர்தல் தேதி அறிவித்த பிறகு தேர்தல் பணியை துவக்கி தமிழ்நாடு முழுவதும் கூட்டணி கட்சிகளின் வேட்பாளர்களை வெற்றி பெற செய்வதில் பாடுபடுவோம் என்று வேல்முருகன் தெரிவித்துள்ளார்.
கடலூரில் தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர்கள் வேல்முருகன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர்,
நாடாளுமன்றத் தேர்தல் தேதி அறிவித்த பிறகு தேர்தல் பணியை துவக்கி தமிழ்நாடு முழுவதும் கூட்டணி கட்சிகளின் வேட்பாளர்களை வெற்றி பெற செய்வதில் பாடுபடுவோம்,
மேலும் கடலூர் நாடாளுமன்ற தொகுதியை தமிழக வாழ்வுரிமைக் கட்சிக்கு வேண்டும் என்ற கோரிக்கையை தமிழக முதல்வரிடம் வைத்துள்ளோம் முதலமைச்சர் வெளிநாட்டு பயணம் மேற்கொண்டுள்ளார் அவர் வந்த பிறகு எங்களுக்கான பதில் கிடைக்கும்,
தொகுதியை கேட்பது எங்களின் கடமை கொடுக்கும் இடத்தில் அவர்கள் உள்ளனர் அவர்கள் பெரிய கட்சி சட்டமன்றத்தில் எப்படி என் குரல் ஒலிக்கிறதோ அதேபோன்று,
இதையும் படிங்க :Agnipath Scheme-”1.5 லட்சம் பேருக்கு வேலை இல்லை.. ”- விளாசிய ராகுல் காந்தி!
நாடாளுமன்றத்திலும் எங்கள் கட்சி சார்பாக குரல் ஒலிக்க விரும்புகிறோம் முடிவெடுத்து கொடுக்க வேண்டிய இடத்தில் இருப்பது திமுக.
எங்களுக்கான வாய்ப்பு மறுக்கப்படாது என நம்புகிறோம் கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் திமுகவிற்கு ஆதரவு தாருங்கள் 40 தொகுதிக்கும் வெற்றிக்கு உழைப்போம் தொடர்ந்து இந்த முறை ஒரு தொகுதியை கேட்டு பெறுவோம் என தெரிவித்தார்.
இண்டி கூட்டணியில் இருந்து நிதிஷ்குமார் வெளியே சென்றுள்ளார் மேலும் அரசியலில் கடைசி நேரத்தில் எந்த அணி யாரோடு வேண்டுமானாலும் வரலாம் எனவே எந்த கருத்தையும் அறுதி இட்டு இறுதியாக சொல்ல முடியாது.
மீண்டும் பாரதிய ஜனதா கட்சி ஆட்சிக்கு வந்தால் நாட்டின் பன்முகத்தன்மை சமூக நீதி சமத்துவம் சகோதரத்துவம் இதற்கெல்லாம் பெரிய ஆபத்து இருப்பதாக அனைத்து தரப்பினரும் கருத்து தெரிவிக்கின்றனர்.
இதையும் படிங்க :https://x.com/ITamilTVNews/status/1752989558113972461?s=20
ஒரு சர்வாதிகாரத்தை நோக்கி பாரதிய ஜனதா கட்சி இந்தியாவை அழைத்து செல்கிறது என்பதுதான் குற்றச்சாட்டு இது நடந்து விடும் என்ற ஐயம் எனக்கும் இருக்கிறது.
நாடாளுமன்ற தேர்தல் தொடர்பாக எந்த கட்சி கூட்டணிக்கு அழைத்தாலும் நிச்சயம் உங்களிடம் (ஊடகத்துறையிடம்) சொல்வேன் என தெரிவித்ததுடன் இப்போதைக்கு வெற்றிக்
கூட்டணியில் உள்ளாட்சித் தேர்தல் சட்டமன்றத் தேர்தல் நாடாளுமன்ற தேர்தல் என மூன்று தேர்தல்களையும் மகத்தான வெற்றி பெற்றுள்ளோம் இந்த கூட்டணியில் இருந்து
மாறுவதற்கான வாய்ப்புகள் இப்போதைக்கு எதுவும் இல்லை திமுகவுடன் பேச்சுவார்த்தை நடத்திய பிறகு தான் எங்களுக்கு இடம் தருகிறதா இல்லையா என்பதை அறிவிப்போம் என வேல்முருகன் (Velmurugan) தெரிவித்தார்.