தமிழக அரசால் நடத்தப்பட்டு வரும் வெம்பக்கோட்டை அகழாய்வில் பீங்கானால் ஆன பழங்கால உருண்டை வடிவ மணி கண்டெடுக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் தமிழக அரசின் தொல்லியல் துறையினர் அகழ்வாராய்ச்சியில் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர் . அந்தவகையில் விருதுநகர் மாவட்டம் வெம்பக்கோட்டையில் கடந்த சில மாதங்களாகவே தமிழ்நாடு அரசின் தொல்லியல் துறை அகழாய்வு பணிகளில் ஈடுபட்டு வருகிறது .
Also Read : வன்னியர்களை பகடைக்காயாக்கும் அன்புமணி – அமைச்சர் சிவசங்கர் விமர்சனம்..!!
இந்த அகழாய்வில் ஏராளமான குழிகள் தோண்டப்பட்டு, அதில் சுடுமண் உருவ பொம்மை, கண்ணாடி மணிகள், சங்கு வளையல்கள், வட்டச் சில்லு, தங்கமணிகள் என இதுவரை 2850-க்கும் மேற்பட்ட பொருள்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.
இந்நிலையில் தொல்லியல் துறையினரால் புதிதாக தோண்டப்பட்ட குழியில் பியான்ஸ் எனப்படும் பீங்கானால் தயாரிக்கப்பட்ட உருண்டை வடிவ மணி, மாவு கற்களால் செய்யப்பட்ட நீள் வட்டவடிவ மணிகள், அலங்கரிக்கப்பட்ட சங்கு வளையல்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.