வேங்கைவயல் விவகாரம் :வேங்கைவயல் விவகாரத்தில் சோதனைக்கு உட்படுத்தப்பட்ட 31 பேரின் டிஎன்ஏ பரிசோதனை முடிவுகள் ஒத்துப்போகவில்லை என்று சிபிசிஐடி தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வேங்கைவயல் விவகாரம்:
புதுக்கோட்டை மாவட்டம், வேங்கைவயலில் 2022ஆம் ஆண்டு டிசம்பர் 26 ஆம் தேதி, பட்டியலின மக்கள் பயன்படுத்தக்கூடிய மேல்நிலை நீர்தேக்கத் தொட்டியில் மனிதக் கழிவு கலக்கப்பட்டது.
இந்த சம்பவம் ஒட்டுமொத்த தமிழகத்தையும் உலுக்கி பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.
இதனை தொடர்ந்து மேல்நிலை நீர்தேக்கத் தொட்டியில் மனிதக் கழிவு கலக்கப்பட்டது தொடர்பாக புதுக்கோட்டை மாவட்ட காவல் துறையினர் விசாரணையில் ஈடுபட்டு வந்தனர்.
மேலும் இவ்வழக்கு சிபிசிஐடி-க்கு மாற்றப்பட்டது. தொடர்ந்து உண்மை கண்டறியும் சோதனைக்கு உட்படுத்தப்பட்ட 31 பேரில்,
10 பேரை உண்மை கண்டறியும் சோதனைக்கு உட்படுத்த சிபிசிஐடி போலீஸார் ஏற்கெனவே சம்மன் அனுப்பினர். ஆனால்,இதற்கு 10 பேரும் எதிர்ப்புத் தெரிவித்து வந்தனர்.
இதையும் படிங்க:http://Arrest-”காவல்துறை அடக்குமுறையை ஏவி.. ”திமுகவிற்கு அண்ணாமலை எச்சரிக்கை!
இதனையடுத்து ,நவம்பர் 2023 28 ஆம் தேதி 10 பேரும் புதுக்கோட்டை வன்கொடுமை தடுப்பு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர்.
கடந்த ஒரு வருடத்திற்கும் மேலாக நடைபெற்று வரும் இந்த விசாரணையில் இன்னும் முடிவு எட்டப்படாமல் இருந்து வருகிறது.
டிஎன்ஏ பரிசோதனை :
இந்த நிலையில், வேங்கைவயல் விவகாரத்தில் சோதனைக்கு உட்படுத்தப்பட்ட 31 பேரின் டிஎன்ஏ பரிசோதனை முடிவுகள் ஒத்துப்போகவில்லை என்று சிபிசிஐடி தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னையில் உள்ள தடய அறிவியல் ஆய்வகத்தில் 31 பேரின் டிஎன்ஏ பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.
இதையும் படிங்க:https://x.com/ITamilTVNews/status/1750048779901014204?s=20
இந்த ஆய்வு முடிவின்படி, டிஎன்ஏ மாதிரிகள்,குடிநீர் தொட்டியில் இருந்து சேகரிக்கப்பட்ட மனிதக் கழிவு மாதிரியின் டிஎன்ஏவும் ஒத்துப்போகவில்லை என்று தெரியவந்துள்ளதாக சிபிசிஐடி எஸ்.பி. தில்லை நடராஜன் தெரிவித்துள்ளார்.
இதனைத் தொடர்ந்து சிபிசிஐடி போலீசார், அடுத்தகட்டமாக குற்றவாளிகளை கண்டறிய சந்தேகத்திற்கிடமான குறிப்பிட்ட 10 நபர்களை தேர்ந்தெடுத்து அவர்களை
உண்மை கண்டறியும் சோதனைக்கு உட்படுத்த திட்டமிட்டுள்ளதாகவும், அதற்காக நீதிமன்ற அனுமதியை கோரி உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
தமிழ்நாட்டை உலுக்கிய கொடுஞ்செயலுக்கு காரணமான குற்றவாளிகளை இதுவரை கைது செய்யாமல் இருப்பதன் மூலம் வேங்கைவயல் சம்பவத்தைத் தொடர்ந்து,
பள்ளிகள் மற்றும் பல்வேறு கிராமங்களில் பொதுமக்கள் பயன்படுத்தும் குடிநீர் தொட்டிகளிலும் இந்த அவலச்சம்பவம் அரங்கேறி வருவது குறிப்பிடதக்கது .