நடிகர் கங்கா, மாரடைப்பு காரணமாக உயிரிழந்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தமிழ் சினிமாவில் பல படங்களில் ஹீரோவாகவும், குணச்சித்திர வேடத்திலும் நடித்து பிரபலமானவர் நடிகர் கங்கா.
கடந்த 1983-ஆம் ஆண்டு தமிழில் டி.ராஜேந்தர் இயக்கத்தில் வெளியாகி வெற்றி பெற்ற ‘உயிருள்ள வரை உஷா’ திரைப்படத்தில் கதாநாயகனாக அறிமுகமானவர் நடிகர் கங்கா.
மேலும் பி.மாதவனின், இயக்கி – தயாரித்த ‘கரையைத் தொடாத அலைகள்’, விசுவின் இயக்கத்தில் 1986-ஆம் ஆண்டு வெளியான ‘மீண்டும் சாவித்திரி’, போன்ற படங்களிலும் நடித்துள்ளார்.
பல படங்களில் இரண்டாவது ஹீரோ போன்ற வேடத்தை ஏற்று நடித்து, ரசிகர்கள் மனதில் இடம் பிடித்துள்ள இவர். சில தொலைக்காட்சி தொடர்களிலும் நடித்துள்ளார்.
63 வயதான இவர் திருமணம் செய்து கொள்ளாமல் தன்னுடைய சகோதரர் குடும்பத்துடன் தான் வசித்து வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில், மயிலாப்பூர் தெற்கு மாடவீதியில் உள்ள வீட்டில் நேற்று திடீர் மாரடைப்பு ஏற்பட்டு நடிகர் கங்கா, உயிரிழந்தார்.
![](https://i0.wp.com/itamiltv.com/wp-content/uploads/2023/11/image-457.png?resize=740%2C417&ssl=1)
அவரது உடல் நேற்று அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து கங்காவின் உடல் அவரது சொந்த ஊரான சிதம்பரத்திற்கு அருகே உள்ள பரதூருக்க்கு எடுத்துச் செல்லப்படுகிறது. அங்கு அவருக்கு இறுதிச் சடங்குகள் செய்யப்பட்டு, உடல் அடக்கம் செய்யப்படுகிறது.