விஜய் சேதுபதியின் “ட்ரெயின்’ – புது அவதாரம் எடுக்கும் இயக்குனர் வெற்றிமாறன்!

Spread the love

நடிகர் விஜய் சேதுபதி நடிக்கவுள்ள புதிய திரைப்படத்தில் இயக்குனர் வெற்றிமாறன் நடிக்கவுள்ளார்.

தென்மேற்கு பருவக்காற்று படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமான விஜய் சேதுபதி, அதனைத் தொடர்ந்து நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம், சூது கவ்வும் உள்ளிட்ட பல திரைப்படங்களில் நடித்தார். பின்னர் பேட்ட, மாஸ்டர், விக்ரம் என வில்லன் கதாபாத்திரத்தில் நடித்தார்.

சமீபத்தில் வெளியான ஜவான் திரைப்படத்தில் வில்லனாக நடித்திருந்த விஜய் சேதுபதி பின்னர் வில்லன் கதாபாத்திரத்தில் நடிக்க மாட்டேன் என சமீபத்தில் கூறி இருந்தார்.

இந்த நிலையில் முதன்முறையாக இயக்குனர் மிஷ்கினுடன் கைகோர்த்துள்ளார் உள்ளார் நடிகர் விஜய் சேதுபதி. ‘ட்ரெயின்’ என டைட்டில் சூட்டப்பட்டுள்ள இப்படத்தின் ஷூட்டிங் சமீபத்தில் பூஜையுடன் தொடங்கியது.
விஜய் சேதுபதி நடிக்கவிருக்கும் புதிய படத்தை ‘V கிரியேஷன்ஸ்’ நிறுவனம் சார்பில் கலைப்புலி.எஸ்.தாணு தயாரிக்கவுள்ளார். இதற்கு மிஷ்கினே இசையமைக்கவுள்ளார்.

இதில் மிக முக்கிய ரோல்களில் கணேஷ் வெங்கட்ராமன், செல்வா ஆகியோர் நடிக்கவுள்ளனர். இவர்களுடன் ஈரா தயானந்த், நாசர், வினய் ராய், பாவனா, சம்பத் ராஜ், கே.எஸ்.ரவிக்குமார், கனிஹா, தியா சீதிபள்ளி, சிங்கம் புலி, ஸ்ரீரஞ்சனி, அஜய் ரத்னம், திரிகுன் அருண், ராச்சல் ரபேக்கா உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள்.

இந்த நிலையில் இந்த திரைப்படத்தில் இயக்குனர் வெற்றிமாறன் நடிக்கவுளதாக தகவல் வெளியாகி உள்ளது.


Spread the love
Related Posts