விக்னேஷ் சிவன்-நயன்தாரா ஜோடி தங்கள் மகன்களின் முதல் பிறந்தநாளை மலேசியாவில் கொண்டாடியபோது எடுத்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் படு வைரலாகி வருகிறது.
தென்னிந்திய திரையுலகில் லேடி சூப்பர்ஸ்டாராக வலம் வரும் நடிகை நயன்தாரா தமிழ் மட்டுமல்லாமல், தெலுங்கு, கன்னடம், மலையாளம் ஆகிய மொழிகளிலும் நடித்து கலக்கி வருக்கிறார்.
இந்நிலையில், அண்மையில் அட்லீ இயக்கத்தில் வெளியான ஜவான் படத்தில் ஷாருக்கானுக்கு ஜோடியாக நடித்திருந்தார் நயன்தாரா. இந்த படம் திரையரங்குகளில் வெளியாகி வெற்றிகரமாக பாக்ஸ் ஆபிஸில் ரூ.800 கோடிக்கு மேல் வசூல் சாதனை படைத்துள்ளது.
விக்னேஷ் சிவன்-நயன்தாரா 7 ஆண்டுகளாக உருகி உருகி காதலித்து, லிவ்விங் டுகெதராக வாழ்ந்து வந்த நிலையில், கடந்தாண்டு ஜூன் மாதம் இருவரும் திருமணம் செய்துகொண்டார்.
திருமணம் முடிந்த 4 மாதத்திலேயே தாங்கள் இரட்டை ஆண் குழந்தைகளுக்கு பெற்றோர் ஆகிவிட்டதாக அறிவித்து இன்ப அதிர்ச்சியும் கொடுத்தனர். இதைப்பார்த்து எப்புட்ரா..? என ரசிகர்கள் ஷாக் ஆன நிலையில், வாடகைத் தாய் முறையில் குழந்தை பெற்றுக்கொள்ள உள்ளதாக அறிவித்தனர்.
இதையடுத்து சினிமாவை சற்று ஓரங்கட்டிவிட்டு குழந்தையை வளர்ப்பதில் ஆர்வம் காட்டி வந்த இந்த ஜோடி, கடந்த ஓராண்டாகவே குழந்தைகளின் முகத்தை வெளியுலகத்துக்கு காட்டாமல் இருந்து வந்தனர். இதனிடையே கடந்த மாதம் இன்ஸ்டாகிராமில் எண்ட்ரி கொடுத்த நயன்தாரா, முதன்முறையாக தன் மகன்களின் முகத்தை வெளியுலகத்துக்கு காட்டினார்.
தற்போது விக்னேஷ் – நயன் ஜோடி தங்கள் மகன்கள் உயிர் மற்றும் உலகத்தின் முதல் பிறந்தநாளை மலேசியாவில் கொண்டாடி உள்ளனர். அங்குள்ள புகழ்பெற்ற டுவின் டவர் முன் மகன்களை தோளில் தூக்கி நின்றபடி எடுத்த போட்டோகளை வெளியிட்டு தன் மகன்களுக்கு ஸ்பெஷலாக பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார் விக்கி.
மேலும், அவரது மற்றொரு இன்ஸ்டா பதிவில் ஜெயிலர் படத்தில் இடம்பெறும் ரத்தமாரே பாடலில் வரும் ‘என் முகம் கொண்ட என் உயிரே, என் குணம் கொண்ட என் உலகே’ என தன் மகன்களின் பெயர்களோடு கூடிய வரிகளை பதிவிட்டு எமோஷனலாக வாழ்த்துக்களையும் தெரிவித்துள்ளார் விக்கி.
விக்னேஷ் – நயன் ஜோடி மகன்களின் முதல் பிறந்தநாளுக்காக நடத்திய போட்டோஷூட் புகைப்படங்கள் இணையத்தில் தற்போது படு வைரலாகி வருகிறது.