இடையூறுகள், விமர்சனங்கள் வந்தால் புன்னகையுடன் அதை கடந்து செல்லுங்கள் என தமிழக வெற்றி கழகத்தின் செயற்குழு உறுப்பினர்களுக்கு நடிகர் விஜய் (vijay advise) அறிவுரை கூறியுள்ளார்.
நடிகர் விஜய்யின் கட்சி பெயர் குறித்த அறிவிப்பு கடந்த பிப்.2-ம் தேதி வெளியாக உள்ளதாக தகவல் வெளியாகிய நிலையில், தனது கட்சிக்கு தமிழக வெற்றி கழகம் என நடிகர் விஜய் பெயர் சூட்டி உள்ளார்.
தமிழ் திரையுலகில் உச்சம் தொட்ட முன்னணி நடிகாராக இருக்கும் நடிகர் விஜய் சமீப காலமாக பொதுவெளியில் மக்கள் நலனுக்காக பல நலத்திட்ட உதவிகளை செய்து வருகிறார்
நடிகர் விஜய் அரசியலுக்கு வரப்போகிறார் என்ற தகவல் கடந்த பல ஆண்டுகளாகவே கிசுகிசுக்கப்பட்டு வந்த நிலையில் அந்த செய்தி தற்போது ஊரறிந்த உலகறிந்த உண்மை ஆகிவிட்டது.
நாடாளுமன்றத் தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில், அண்மையில் சென்னை பனையூரில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
இந்த ஆலோசனைக் கூட்டத்தில், விஜய் மக்கள் இயக்கம் விரைவில் அரசியல் கட்சியாக மாற்றப்படுவதாகவும், இந்த கட்சியை பிப்ரவரி முதல் வாரத்தில் இந்திய தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்ய உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது.
சொன்னது சொன்னபடி நடிகர் விஜய்யின் கட்சி பெயர் குறித்த அறிவிப்பு கடந்த பிப்.2-ம் தேதி வெளியாகி உள்ளது.
இதுகுறித்து விஜய் வெளியிட்டுள்ள செய்தியில் :
2024 நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடுவதில்லை என்றும், எந்தக் கட்சிக்கும் ஆதரவு இல்லை என்றும் விஜய் தெரிவித்துள்ளார்.
2026 சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெறுவது தான் இலக்கு என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
தேர்தல் ஆணையத்தின் ஒப்புதல் கிடைத்ததும், கட்சியின் சின்னம், கொடி ஆகியவைற்றை வெளியிட விருப்பதாகவும் விஜய் தெரிவித்துள்ளார்.
ஏற்கனவே ஒப்புக்கொண்டுள்ள திரைப்படம் சார்ந்த கடமைகளை, கட்சி பணிகளுக்கு இடையூறு இல்லாத வகையில் முடித்துவிட்டு, முழுமையாக, மக்கள் சேவைக்கான அரசியலில் ஈடுபட உள்ளதாகவும்,
அதுவே தமிழ் நாட்டு மக்களுக்கு நான் செய்யும் நன்றி கடனாக கருதுகிறேன் எனவும் நடிகர் விஜய் தெரிவித்துள்ளார்.
இதையடுத்து விஜயின் இந்த அரசியல் பயணத்திற்கு பலரும் வாழ்த்து தருவித்து வருகின்றனர்.
இதையடுத்து தமிழக வெற்றி கழக செயற்குழு உறுப்பினர்களுக்கு காணொளி வாயிலாக அக்கட்சியின் தலைவர் விஜய் அறிவுரை வழங்கியதாக தவல்கள் வெளியாகியுள்ளன.
அதன்படி தமிழக வெற்றி கழக தலைவரும் நடிகருமான விஜய் கூறியதாவது:
இடையூறுகள், விமர்சனங்கள் வந்தால் புன்னகையுடன் கடந்து செல்லுங்கள். மக்கள் பிரச்சனையில் கவனம் செலுத்துங்கள். குக்கிராமங்களிலும் கட்சியைப் பற்றி தெரியப்படுத்த வேண்டும்.
Also Read : https://itamiltv.com/petition-filed-by-senthil-balaji-feb-15-judgment/
2024 தேர்தலுக்குப் (vijay advise) பின் கட்சிப் பணிகள் தீவிரமடையும். இவ்வாறு நடிகர் விஜய் கூறியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.