இசையமைப்பாளர் விஜய் ஆண்டனியின் அன்பு மகள் மீராவின் மறைவுக்கு திமுக எம்.பி தமிழச்சி தங்கபாண்டியன் இரங்கல் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து தமிழச்சி தங்கபாண்டியன் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில் கூறிருப்பதாவது :
இசையமைப்பாளரும், நடிகருமான திரு.விஜய் ஆண்டனியின் மகள் மீரா மரணம் அடைந்த செய்தி கேட்டு பேரதிர்ச்சி அடைந்தேன்.
கடந்த, ஜூன் மாதம், சென்னை – சர்ச் பார்க் பள்ளியில் நடந்த மாணவர் தலைவர்களுக்கான பதவியேற்பு விழாவில் கலந்துகொண்டு, கலைநிகழ்ச்சி குழுவின் தலைவராக மீராவுக்கு பதவி பிரமாணம் செய்து வைத்தேன். துடிப்பும், சுறுசுறுப்பும், ஆர்வமும் நிறைந்த பெண்ணாயிருந்த மீராவின் இந்த முடிவு, மிகுந்த மன வேதனையை அளிக்கின்றது.
அவரை இழந்து வாடும், அவரது தந்தை திரு.விஜய் ஆண்டனி மற்றும் குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலும், அனுதாபமும் என தமிழச்சி தங்கபாண்டியன் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.